TRB NEWS: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2011

TRB NEWS:

TRB EXAM:தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க கல்வி துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்3, ஆங்கிலம்4, கணக்கு 3, இயற்பியல்3, வேதியியல் 6, தாவரவியல்4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பி.ஏ, பிஎஸ்சி மற்றும் பி.எட் படித்த 35 வயதுக்குட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு 3 மணி நேரம் நடக்கும். முதன்மைப் பாடம் 110 மதிப்பெண், கற்பித்தல் முறை 30, பொது அறிவு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 மதிப்பெண்ணும், இதர மாணவர்கள் 60 மதிப்பெண்ணும் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
தேர்வு மையங்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்று சரிபார்ப்பு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் போட்டோ, டிடி ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளத.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி