Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

12, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.

0 Comments

12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும்.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம்பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.

SSLC PUBLIC EXAM 2013 DATES

0 Comments

27.03.2013 - Tamil Paper 1
28.03.2013 - Tamil Paper 2
01.04.2013 - English Paper 1
02.04.2013 - English Paper 2
05.04.2013 - Maths
08.04.2013 -Science
12.04.2013 - Social Science

Tamil Nadu Open University BEd Term End Examination December-2012 Result Published Now

0 Comments

B.Ed & B.Ed (S.E.) Term End Examination Results December (2012)

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - NOV 2012 RESULTS

0 Comments

CLICK HERE FOR CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - NOV 2012

HAPPY NEW YEAR TO ALL

0 Comments

தொடக்கக் கல்வி - பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்த்தல் - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகப்படுத்துதல்" - தமிழகம் முழுவதும் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த உத்தரவு.

0 Comments

TO DOWNLOAD FREE ADMISSION AWARENESS CAMP, RALLY & FESTIVAL CELEBRATION REG - PROC CLICK HERE...

இரண்டு மாதங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் கிடையாது: உணவுத் துறை அமைச்சர் அறிவிப்பு.

0 Comments

தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஜனவரி 1-ம் தேதி நடைபெற இருப்பதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம்.

0 Comments

ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கும் வகையில், அவற்றில் உள்தாள்களைஒட்டும் பணி ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார்.இந்தக் கூட்டத்தில் அவர் கூறியது: தமிழகத்தில் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், 1.84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 33 ஆயிரத்து 474 ரேஷன் கடைகள் மூலம்அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்கான ஒதுக்கீட்டின்படி அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வரும் 5-ம் தேதிக்குள் நகர்வு செய்யப்பட்டு இருப்பு வைக்க வேண்டும்.அட்டைதாரர்களுக்குத் தேவையான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மானிய விலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் பாமாயில் சென்னை துறைமுகத்துக்கு மூன்று கப்பல்கள் மூலமும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மூலம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் பாமாயிலும் கொண்டு வரப்படுகிறது.உள்தாள் ஒட்டும் பணி: இப்போது நடைமுறையிலுள்ள ரேஷன் அட்டைகள்2013-ம் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அவற்றின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 1-ம் தேதி முதல் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறவுள்ளது. இதன்படி, குடும்பத் தலைவர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு:ரேஷன் அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் இன்றி புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு வர முடியாதவர்கள், அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பி.எம்.பஷீர் அஹமது, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்:ரேஷன் கடைகளில் தரமான பொருள்களை விநியோகம் செய்ய மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.இது குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.இதை உறுதி செய்யவும், கடைகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்திருப்பது, பொருள்களின் தரம் குறித்த புகார்கள், கடைகளில் தரமற்ற பொருள்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

▼"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம்.

நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயரை வெளியிட முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு.

0 Comments

அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின், தடயவியல் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். "இந்த ஆட்கள் தேர்வின் போது, நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்கவேண்டும்" என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்த தகவலைதெரிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது, "நேர்முகத் தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என, ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, பீகார் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஸ்வதேந்தர் குமார், எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு:அரசுப் பணிகளுக்காக நேர்முகத் தேர்வு நடத்துவோரின் பெயர்களை,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கோர முடியாது. அவ்வாறு பெயர்களை வெளியிட்டால், அந்த நேர்முகத் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்வதற்கான, ஒரு வழிமுறை என்றாலும், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில வரையறைகள் உள்ளன. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பாட்னா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை, தள்ளுபடி செய்தனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..

0 Comments

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - செய்து குறிப்பு எண் .467 நாள்.31.12.2012 பதிவிறக்கம் செய்ய

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்தினால் புகார் அளிக்கலாம், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

0 Comments

குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 435பேர் தேர்வு எழுதினர். இதை மேற்பார்வையிட வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது கல்வி உதவித்தொகைமாதம் ரூ.500 வீதம் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது.இந்த உதவித் தொகையைப் பெற திருவண்ணாமலையில் 415, ஆரணியில்435, செய்யாறில் 496 என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,346 மாணவர்கள் தேர்வு எழுதினர்.திருவண்ணாமலை மாவட்டம், கல்வித் தரத்தில் தமிழக அளவில் 27வது இடத்தில் உள்ளது. இதனை 10 இடத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி பல்வேறு வகையானஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.நன்கு படிக்காத மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணாவது பெற்றுதேர்ச்சி பெறும் அளவிற்கு கேள்வித்தாள்களை தயாரித்துத் தருவது, அதற்கான பதில்களை எப்படி எழுதுவது, மாணவர்களுக்கு எப்படி சொல்லித் தருவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடத்தை மாணவர்கள் வீட்டில் படிக்கிறார்களா என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது, தனியாக பள்ளி நடத்துவதுபெரிய தவறு. இதுபோன்ற நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செ.முருகேசன் உடன் இருந்தார்.

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் குளறுபடியால் தேர்வான ஆசிரியர்கள் தவிப்பு.

0 Comments

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தேர்வான ஆசிரியர்கள்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தவித்து வருகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2895 காலிப்பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வுகள் நடந்தது. இதில் வழக்கு காரணமாக 587பணியிடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 2308 பேருக்கு தேர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த பட்டியலில் தகுதியற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினரால் சரி பார்க்கப்பட்டது. இதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பணி நியமன ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் இன்று நடக்கவுள்ளது. கோர்ட் வழக்கில் தமிழ் வழியில் பட்டம் பயின்றவர்கள், தாவரவியல் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமே பிரச்னை உள்ளது. மற்ற பாடப்பிரிவுகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவேண்டும்.பல பாடப்பிரிவுகளில் முதல் பட்டியலில் வெளியான கட்-ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாம் பட்டியலில் பலருக்கு மதிப்பெண் காட்டப்படாமல் தேர்வில் ஆப்சென்ட் காட்டப்பட்டுள்ளது. மதிபெண் பூஜ்யம் காட்டுகிறது.கடினமாக உழைத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்ட பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சியமாக உள்ளது. பலரது வாழ்க்கை பிரச்னையை கவனத்துடன் செயல்படாமல், கண்ணா மூச்சி ஆட்டம் போல ஆடி வருவது தேர்வான ஆசிரியர்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத தேர்வான ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழாசிரியர்கள் காலிப்பணியிடம் 601. இதில் முதல் பட்டியலில் நான் தேர்வு பெற்றுள்ளேன். இரண்டாம் பட்டியலில் 538 பேர் மட்டுமே தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது.மீதமுள்ள 63 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகிய போதுதேர்வு பட்டியல் ஆன் லைனில் வெளியிடப்படும் அதுவரை காத்திருங்கள், என்கின்றனர். நிறுத்தம் செய்திருப்பதற்கான காரணங்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.இது போன்ற குழப்பம் இல்லாமல் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வரவேண்டும், என்றார்.

தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும்7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு.

0 Comments

பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை​கள் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளன.​சென்​னை​யில் 10 தேர்வுமையங்​க​ளில் 12,500 பேர் இந்​தத் தேர்வை எழுத உள்​ள​னர்.​முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை​யி​லும்,​இரண்​டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணிவரை​யி​லும்,​மூன்​றாம் தாள் பிற்​ப​கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை​யி​லும் நடை​பெ​றும்.​முதல் தாளில் 60 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​இரண்​டாம் தாளில் 50 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​மூன்​றாம் தாளில் 75 கேள்​வி​க​ளும் (150 மதிப்​பெண்)​இடம்​பெ​றும்.​முதல் தாளில் 50 கேள்​வி​க​ளுக்​கும்,​மீத​முள்ள 2 தாள்​க​ளில் அனைத்து கேள்​வி​க​ளுக்​கும் கட்​டா​யம் விடை​ய​ளிக்க வேண்​டும்.​பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 40 சத​வீத மதிப்​பெண்​ணும்,​இதர பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்கள்,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 35 சத​வீத மதிப்​பெண்​ணும் தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.​மூன்​றாம் தாளுக்கு மட்​டும் 75 (50 சத​வீ​தம்)​தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​இதில் இதர பிற்​ப​டுத்​தப்​பட்​டோ​ருக்கு தேர்ச்சி மதிப்​பெண்​ணாக 68 மதிப்​பெண்​ணும் (45 சத​வீ​தம்)​,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 60 மதிப்​பெண்​ணும் (40 சத​வீ​தம்)​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​புதிய விதி​மு​றை​கள்:​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ள​ரா​கத் தகு​தி​பெற புதிய விதி​மு​றை​க​ளை​யும் பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அமல்​ப​டுத்​தி​யுள்​ளது.​அதன்​படி,​தேர்ச்சி பெற்​ற​வர்​க​ளைக் கொண்டு பாட​வா​ரி​யாக தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும்.​அனைத்​துப் பாடங்​க​ளி​லும் தேர்ச்சி பெற்​ற​வர்​களி​லி​ருந்து முதல் 15 சத​வீ​தம் பேர் மட்​டுமே விரி​வு​யு​ரை​யா​ளர் தகுதி பெற்​ற​வர்​க​ளாக அறி​விக்​கப்​ப​டு​வார்​கள்.​இளம் ஆராய்ச்​சி​யா​ள​ருக்​கான உத​வித் தொகை வழங்க இவர்​களி​லி​ருந்து தனி​யான தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும் என்று பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அறி​வித்​துள்​ளது.​கடந்த தேர்​வில் தேர்ச்சி விதி​மு​றை​களை மாற்​றி​ய​தைத் தொடர்ந்து தேர்வு முடி​வு​களை வெளி​யி​டு​வ​தில் பல்​வேறு பிரச்​னை​கள் எழுந்​தன.​இதைத் தொடர்ந்து,​புதிய விதி​மு​றை​கள் இப்​போது அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.​

டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு - Dinamalar.

0 Comments

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு,காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது.முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் கலந்தாய்வு - Dinamani

0 Comments

தமிழக முதல்வரால் 13.12.12 அன்று ஆணை வழங்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு  பள்ளிக் கல்வித்துறையால்பள்ளிகளில் நியமன ஆணை திங்கள் கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை, மற்றும் அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பக அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும்.மாவட்டத்திற்குள் பணி புரிய விரும்புவோருக்கு காலையிலும், வெளிமாவட்டத்தில் பணி புரிய விரும்புவோருக்கு பிற்பகலிலும் கலந்தாய்வு நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

வெளிவராத தமிழ் அகராதி: டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சிக்கல்.

0 Comments

கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், தமிழ் ஆட்சிமொழி அகராதி வெளி வராததால், அரசுத் துறை தேர்வு எழுதுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழாசிரியர் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "கடந்த 1957 முதல் 2000ம் ஆண்டு வரை, 6 தமிழ் அகராதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக புதிய அகராதி வெளிவரவில்லை. தற்போது நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., உட்பட அரசு துறை தேர்வுகளில், தமிழ் அகராதிகளில் இருந்து, கேட்கும் சில கேள்விகளுக்கு, விடை காண முடியவில்லை.சமீபத்தில், சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் கூட, ஈரோடு பகுதியில் பேசப்படும்,"ஈமு" எனும் வார்த்தைக்கு யாராலும்,விளக்க மளிக்க முடியவில்லை. காரணம், பழைய தமிழ் அகராதிகளில்"ஈமு" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் இல்லை.ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த வட்டாரத்தில் புதுப்புது தமிழ் வார்த்தைகள் பிறக்கின்றன. இவற்றிக்கு, தமிழில் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், தமிழாசிரியர்கள், அரசு அதிகாரிகள் திணறுகின்றனர்.தமிழ் வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் அகராதி புத்தகங்களை பொது மக்கள் படிக்க முடியாத நிலையில், ஆசிரியர் அரசு துறையை சார்ந்தவர்கள் படிக்க, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கடிதம் பெறுதல் என்ற கட்டாய உத்தரவை தளர்த்த வேண்டும்.குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அகராதிகளை வெளியிட வேண்டும், என்றார்.

WELCOME TO TNSTUDY
 
Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives