Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB EXAM PG TEACHERS

0 Comments

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. Advertisement No.03 / 2012 Dated.28.02.2012 2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பு வெளியீடு நாள் : 28.02.2012 விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012 ஊதிய விகிதம் : ரூ.9300 - 34800 + தர ஊதியம் :4800/-

TRB EXAM-PG TEACHERS

0 Comments

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012

"THAI" 2011-12

0 Comments

தாய் திட்ட ஊராட்சிப் பள்ளிகளுக்கு கூடுதல் வசதி தாய் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கூடுதல் வசதிகளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்(தாய்) செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில், குக்கிராமங்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, மயானத்திற்கான அடிப்படை தேவைகள், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலைப்பணிகள் மட்டும் அதிகபட்சம் 30 சதவீதம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் பிற திட்ட நிதிகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், கைப்பம்பு, கழிப்பிடம், சமையல் அறை, கூடுதல் வகுப்பு கட்டடங்களும் இத்திட்டத்தில் கட்டி கொடுக்கப்பட உள்ளன.
0 Comments

Kalviseithi All Ele & Midle Schls should conduct-science exhibitn on 28.2.12 at Schools& distribute prizes&certificats. More info http://kalviseithi.tk

5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு

0 Comments


5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு-24-02-2012

எழுத்தின் அளவு :
சென்னை: குரூப்-4 நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, 5,000 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுசெய்ய உள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது: நடப்பாண்டில், குரூப்-1 மற்றும் குரூப்-2 (பட்டதாரி தகுதி) தேர்வுக்குரிய காலியிட பட்டியல்கள் வந்துள்ளன. இதுதவிர, குரூப்-4 நிலையில், அரசின் பல்வேறு துறைகளுக்கு, 5,000 பேரை தேர்வு செய்யவும் உத்தரவு வந்துள்ளது.
தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, இவர்கள் தேர்வு செய்யப் படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.
இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே, வெளியான வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வு முடிவில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் பணி நியமனம் வழங்கப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படமாட்டாது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளியிடுவதுடன், தேர்வு முடிவிற்குப் பின், அதற்கான விடைகளையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

TTET NEWS

0 Comments

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை, ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தின் அடிப்படையிலும் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டம் இந்த அளவில் இருந்தாலும், விண்ணப்பதாரர்களை சிந்திக்க வைக்கும் வகையில், அதிகளவில் கேள்விகள் இடம்பெற உள்ளன. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை இறுதி செய்து, அரசின் ஒப்புதலுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பி வைத்தது. இதற்கு, அரசு தற்போது ஒப்புதல் அளித்து விட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள், அரசு கெஜட்டில் வெளியான பின், தகுதித் தேர்வு குறித்த அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். இந்தப் பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவடைய வாய்ப்புகள்இருக்கின்றன என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

PG Teachers selection

0 Comments

பள்ளிக் கல்வித் துறையில், புதிதாக 1,152 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் தேர்வுப் பட்டியலை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டுக்கான, 1,152 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தகுதியானவர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு, கடந்த 7, 8, 9 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதற்கிடையே, பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 198 பேரின் பட்டியல் விடுபட்டதாகக் கூறி, அவர்களின் பதிவு மூப்பு விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இவர்களுக்கு, 20, 21 ஆகியதேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், இன சுழற்சி வாரியாக, பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியலை தொகுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்வுப்பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள், மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

TTET NEWS Tamil

0 Comments

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 90 மதிப்பெண் (60 %) எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் , அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள் ' வடிவில் முதல் தாள் , இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த , நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிகள் 1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம் , பட்டப்படிப்பு முடித்தவர்கள். 2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள். 150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும். இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும் , ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் , அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண் , தேர்வெழுதிய ஆண்டு , மாதம் , மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண் 2. மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி) 30மதிப்பெண் 3. மொழித்தாள் -2(விருப்ப மொழி) 30 மதிப்பெண் 4. கணிதம் 30மதிப்பெண் 5.சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண் இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண் 2. மொழித்தாள் - 1(கட்டாயம்) 30 மதிப்பெண் 3. மொழித்தாள் - 2(கட்டாயம்) 30 மதிப்பெண் 4. (அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண் (ஆ) சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண் (இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக , எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க , ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை , 50 ரூபாயாகவும் , தேர்வுக் கட்டணம் , 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க , டி.ஆர்.பி. , திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என , இரு பிரிவினருக்கு , தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் , தலா , 150 மதிப்பெண்களுக்கு , பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். கருத்துரையிடுக
0 Comments

அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி "அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், ஆங்கில வழிக் கல்வி துவங்கி, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என,துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் கூறினார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பி.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டுமின்றி வகுப்பறை, கழிப்பிடம், குடிநீர் ஆகிய வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு சில பள்ளிகளுக்கு, போதுமான இடவசதி இல்லாததால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும். ஸ்மார்ட் கிளாஸ் உண்டு பள்ளிகளுக்கு, டிவி, டிவிடி பிளேயர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் போன்ற கல்வி கற்றுத் தரப்படும். மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டில் 56 ஆயிரத்து 143 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தேர்ச்சி அடையும் ஆசிரியர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர். ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலம் மேலும், 810 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் வேலை வாங்குவதைத் தவிர்க்கவும், பள்ளியிலுள்ள அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்கவும், அந்தந்தப் பகுதி உதவி துவக்கக் கல்வி அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில், நடுநிலைப் பிரிவு போன்று, ஆரம்ப நிலையிலேயே ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்கப்படும். இதன்பொருட்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு, இணை இயக்குனர் ராமராஜ் கூறினார். நன்றி-தினமலர். கருத்துரையிடுக

AEEO EXAM

1 Comments

AEEO Post Exam on 26.2.12 &Hall Tickets wil be sent before 20.2.12.

Teachers EIigibility Test

0 Comments

Teachers EIigibility Test-Syllabus Ready-Soon In Net-8 Lakh Applications Are Ready, Application Cost-50. Exam Fee-500. Within 5 Years to Pass Exam.

CRC NEWS

0 Comments

1) 11.2.2012 Upp. Pry CRC Topic: (QMT&OSC) 2) 18.2.2012 Pry & Upp.pry CRC Topic: Right to Education Act 2009

RH 2012

0 Comments

kalvisaithi: RH 2012 Jan5,14 F7,20,22 M7 A5 M5 J18 Jul 5,21 A1,2,15,29 S17 O 25 N 2,13,16,27,28 D 24,28,31 detail:www.kalvisaithi.wapka.mobi

IGNOU B.ED RESULT

0 Comments

Kalvisaithi:IGNOU BED exam 1st and 2nd yr result released Get result :www.kalvisaithi.wapka.mobi

IGNOU B.ED RESULT

0 Comments

IGNOU BED exam 1st and 2nd yr result released Get result :www.kalvisaithi.wapka.mobi
WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives