TTET NEWS Tamil - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2012

TTET NEWS Tamil

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 90 மதிப்பெண் (60 %) எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் , அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. "மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள் ' வடிவில் முதல் தாள் , இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த , நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிகள் 1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம் , பட்டப்படிப்பு முடித்தவர்கள். 2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள். 150 மதிப்பெண்ணுக்குத் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும். இவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும் , ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் , அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண் , தேர்வெழுதிய ஆண்டு , மாதம் , மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண் 2. மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி) 30மதிப்பெண் 3. மொழித்தாள் -2(விருப்ப மொழி) 30 மதிப்பெண் 4. கணிதம் 30மதிப்பெண் 5.சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண் இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு 1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண் 2. மொழித்தாள் - 1(கட்டாயம்) 30 மதிப்பெண் 3. மொழித்தாள் - 2(கட்டாயம்) 30 மதிப்பெண் 4. (அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண் (ஆ) சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண் (இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக , எட்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க , ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பத்தின் விலை , 50 ரூபாயாகவும் , தேர்வுக் கட்டணம் , 500 ரூபாயாகவும் நிர்ணயிக்க , டி.ஆர்.பி. , திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என , இரு பிரிவினருக்கு , தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவினருக்கும் , தலா , 150 மதிப்பெண்களுக்கு , பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். கருத்துரையிடுக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி