+2 தேர்வில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க, ஸ்கேன் செய்த போட்டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2012

+2 தேர்வில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க, ஸ்கேன் செய்த போட்டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் அறிமுகம்

சென்னை: +2 தேர்வில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க, தேர்வு எழுதும் மாணவரின் போட்டோக்களை ஸ்கேன்செய்து பதிக்கப்பட்ட ஹால் டிக்கெட்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் +2 தேர்வு வரும் 8ம் தேதி முதல் துவங்குகின்றது. இதில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளது. இதற்காக 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக மாணவர்களின் போட்டோக்கள் ஒட்டுப்பட்ட ஹால் டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுதும் மாணவரின் போட்டோவை நீக்கிவிட்டு வேறு போட்டோ வைத்து ஆளுமாற்றம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்றன. இதனை தவிர்க்க இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்களில் ஸ்கேன் செய்த போட்டோக்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆள்மாற்றம் செய்வதுதவிர்க்கப்படும். இந்த ஆண்டு முதல் அறிமுகப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்டஹால் டிக்கெட்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி