வரும் 22ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2012

வரும் 22ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டங்கள் வெளியீடு?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை, 22ம் தேதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிவோர் மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வகை தேர்வுகளாக, ஜூன் 3ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. எனினும், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, &'பாட வாரியாக, பாடத் திட்டங்களை தயாரித்து, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலையும் பெற்றுவிட்டோம். ஆனால், அவை இன்னும் அரசின், கெஜட்டில் வெளியாகவில்லை. விண்ணப்பங்களை வழங்குவதற்குள், இணையதளத்தில் பாடத் திட்டங்கள் வெளியிடப்படும்&' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி