பதவி உயர்விற்கும் TET அவசியமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2012

பதவி உயர்விற்கும் TET அவசியமா?

தேவையில்லாமல் ஒரு புதிய செய்தியாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு தான் இனி பதவி உயர்வு என்றும் 31.12.2010 பிறகு பி.எட்., முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வு கிடையாது என்றும் புரளி பரப்பப்பட்டு வருகிறது. அப்படி சொல்வது உண்மையானால் கடந்த செப்டம்பர் 2011 ல் நடந்த பதவி உயர்வு கலந்தாய்விலும், பின்பு டிசம்பர் 2011 ல் நடந்த பதவி உயர்வு கல்ந்தாய்விலும் பதவிஉயர்வு எவ்வாறு வழங்கப்பட்டது. எனவே இது குறித்து அச்ச பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அரசோ / பள்ளிகல்வி இயக்குனரகமோ / தொடக்கக்கல்வி இயக்குனரகுமோ எந்தவிதஅரசாணையோ அல்லது செயல்முறைகளோ, அறிவிப்போ இதுவரை வெளியிடவில்லை என தெரிவித்துக்கொள்கிறோம். ஆசிரியர் தகுதி தேர்வானது புதியதாக 23.08.2010 க்கு நியமிக்கப்பட்டவர்களுக்கும் இனி நியமனம் செய்யப்பட உள்ளவர்களுக்கும் தான் பொருந்தும் அரசாணையும் அதை தான் கூறியுள்ளது ஏற்கெனவேநியமனம் செய்யப்பட்டுதற்போது பதவி உயர்விற்காக காத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. இது குறித்து தெளிவுரையோ அல்லது அரசாணையோ இனி வருமேயானால் நிச்சயமாக நமது இணையதளத்திலும், SMS CHANNEL வழியாகவும் தெரிவிக்கப்படும். எனவே தேவையில்லாமல் பொய்யான தகவலை பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி