தமிழ்நாட்டில் புதிதாக் இரண்டு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 11 புதிய கலை அறிவியல் கல்லூரிகளும், 7 புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2012

தமிழ்நாட்டில் புதிதாக் இரண்டு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 11 புதிய கலை அறிவியல் கல்லூரிகளும், 7 புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வாசித்தார். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிலிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியிலும் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி, வேடசந்தூர், மொடக்குறிச்சி, திருமங்கலம், திருவொற்றியூர், பரமகுடி, கடையநல்லூர், அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம், அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி