தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2012

தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 900 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சிவபதி தெரிவித்தார். 22 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத 8 மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவர 140 லட்சம் செலவில் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும், நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றும் சிவபதி தெரிவித்தார். இதுபோன்று பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி