ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல் பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு எதிரானது. 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முந்தைய அறிவிப்பாணைபடி பணி நியமனம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. நான் 2009ம் ஆண்டில் வெளியான அறிவிப்பாணைபடி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 2010 செப்டம்பர் 15ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பதால், நானும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுக்கு எதிரானது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழக அரசு 2010 ஆகஸ்ட் 23ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், சிவகங்கை வீரபட்டி பஞ்சாயத்து யூனியன் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் விஜய், தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களையும் நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆஜராகினர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி