ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: வினா - விடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: வினா - விடை!

இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல ஆசிரியர் தகுதித் தேர்வை   கட்டயமாக்கி தமிழக ஆசிரியர்களின் தரத்தினை உயர்த்த தமிழக அரசு ஆசிரியர் தகுதித்  தேர்வினை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. TET அறிவிப்பு: ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 12.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. * ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு செய்துள்ளது. * ஆசிரியர் தகுதி தேர்வு (TET) மார்க் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு போட்டித்தேர்வு கிடையாது என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார். * ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளன. * கணினி ஆசிரியர்களுக்கு ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு கணினி பாடம் கட்டாயமாக்கபடாததால் TET குறித்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு TRB - யால் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியர் நியமன வாய்ப்பு அதிகம் இருப்பதாலும், அப்பொழுது இவர்களுக்கு TET கட்டயமாக்கபடும் என்பதாலும் இப்போதே இவர்கள் TET தேர்ச்சி பெற்று வைத்திருத்தல் நலம். இவர்கள் இப்பொழுது TET எழுத தடையேதுமில்லை.இவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க வேண்டியவை. பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள். * கணினியில் பி.எட் முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதுதல் நல்லது. 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths and Science - 60 மதிப்பெண் * குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது. * 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. * கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும். * இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும். * இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது. * ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. * தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும். * இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும். * முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths - 30 மதிப்பெண் 5. Environmental studies - 30 மதிப்பெண் * இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும். 1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் : 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths and Science - 60 மதிப்பெண் 2. சமுக அறிவியல் ஆசிரியர் : 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Social Studies - 60 மதிப்பெண் 2. தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு : 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths&Science அல்லது Social Studies - 60 மதிப்பெண் * சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும். * தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். * TET தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி