Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

போலிகளை உருவாக்க முடியாத சிறப்பம்சம் கொண்ட மதிப்பெண் சான்றிதழ்கள்

0 Comments

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், சில சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், பள்ளிகளில், ஒரே நாளில் லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கு முயன்றதால், இணையதளம் முடங்கியது.சென்னையில், காலை 11 மணியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதை பெறுவதற்கு, மாணவர்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் வந்தனர். மதிப்பெண் சான்றிதழில் உள்ள விவரங்களை, மாற்றுச் சான்றிதழில் (டிசி) பதிவு செய்த பின், இரு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 395 பேருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மடி கணினி:மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச மடி கணினிகள் ஓரளவு மட்டுமே வழங்கப்பட்டன. இதனால், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் பின்பக்கம், "லேப்-டாப் நாட் இஷ்யூடு" என்றும்; வழங்கப்பட்ட மாணவ, மாணவியரின் சான்றிதழில், "லேப்-டாப் இஷ்யூடு" என்றும் முத்திரையிடப்படுகிறது. இலவச மடி கணினி வாங்காத மாணவர், கல்லூரியில் சேர்ந்த பின் பெற்றுக் கொள்ள வசதியாக, இந்த முத்திரையிடப்படுவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கூடுதல் அம்சங்கள்:மதிப்பெண் சான்றிதழில், "லைன் பிரின்டர்" முறையில் அச்சிடப்பட்டதற்கு பதிலாக, "லேசர் பிரின்ட்" மூலம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால், மதிப்பெண் சான்றிதழ் நேர்த்தியாக உள்ளது. சான்றிதழின் இடப்பக்கத்தில், கறுப்பு - வெள்ளையில் மாணவரின், "பாஸ்போர்ட்"அளவில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.சான்றிதழின் வலப்பக்கத்தின் மேல் பகுதி மற்றும் வலப்பக்க ஓரம் என,"2டி" பார்கோடு இடம்பெற்றுள்ளது. சான்றிதழில் உள்ள மாணவரின் பெயர், படித்த பள்ளி, தேர்வெழுதிய ஆண்டு, பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள், பிறந்த தேதி, சான்றிதழ் எண், தேர்வுபதிவெண் உள்ளிட்ட விவரங்கள், இரு,"பார்கோடு"களிலும் இடம்பெற்றுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு,"பார்கோடு" சேதமடைந்தால், மற்றொரு,"பார்கோடை" பயன்படுத்தி, மாணவரின் விவரங்களை அறிய முடியும்.பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் - உண்மை தன்மை அறிய புதியதிட்டம்:உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், விண்ணப்பதாரரின் பள்ளி, பொதுத் தேர்வு குறித்த உண்மைத் தன்மையை அறிய, மதிப்பெண் சான்றிதழ்,"பார்கோடில்" உள்ள விவரங்களுக்கு, பொதுவான, "பாஸ்வேர்டு" ஒன்றை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், போலி கல்விச் சான்றிதழ் தயாரிக்கும் கும்பல்கள் அதிகமாக உள்ளன.சில ஆண்டுகளுக்கு முன், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக, போலி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை, ஒரு கும்பல் தயாரித்தது. தேர்வுத் துறைமற்றும் கல்வித்துறை முன்னாள் ஊழியர் சிலருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது."கவுன்சிலிங்" நேரத்தில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.போலிகளுக்கு வாய்ப்பில்லை:இதையடுத்து, முதல்முறையாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சான்றிதழைப் போல், போலி மதிப்பெண் சான்றிதழை அச்சடிக்க முடியாது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்தன. பலவிதமான கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரு, "பார்கோடு"களை, போலிகளால் உருவாக்க முடியாது; மேலும்,"ஸ்கேன்" செய்யப்பட்ட மாணவரின் புகைப்படமும் சான்றிதழில் சேர்த்து இடம் பெற்றிருப்பது, கூடுதல் அம்சம் என, அவர்கள் தெரிவித்தனர்.விவரம் அறிய:தற்போதைய நிலையில்,"பார்கோடை" பயன்படுத்தி, அதில் உள்ள விவரங்களை, உயர்கல்வி நிறுவனங்கள் அறிய முடியாது. அண்ணா பல்கலை, மருத்துவக் கல்வி இயக்குனரகம், பல்கலைகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., உள்ளிட்ட அரசு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், விண்ணப்பதாரரின் பள்ளிக்கல்வி மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள விவரங்கள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள,"பார்கோடை ஸ்கேன்" செய்தால், அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.பாஸ்வேர்டு:இதற்காக, பொதுவான,"பாஸ்வேர்டு" வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான பணிகளை, "நிக்" நிறுவனம் செய்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள், இப்பணிகள் முடிந்து, "பாஸ்வேர்டு" விவரம், முக்கியமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பார்கோடை ஸ்கேன் செய்து,"பாஸ்வேர்டை" பதிவு செய்தால், அதில் உள்ள விவரங்கள் கம்ப்யூட்டரில் வந்துவிடும். தனிப்பட்ட எந்த ஒரு நபருக்கும்,"பாஸ்வேர்டு" தெரியாது என்பதால்,"பார்கோடை" பயன்படுத்தி, அதிலுள்ள விவரங்களை அறிய முடியாது என்பது தான், திட்டத்தின் சிறப்பம்சம்.

தொடக்கக் கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 15 க்கு பிறகு நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 Comments

2012 - 2013ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தமிழக அரசு கடந்த மே 18 ல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பொது மாறுதல் சார்பான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து முதற்கட்டமாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் தலைமையில் 8 மாவட்டங்களில் தனது நேரடி பார்வையின் கீழ் நடந்த தொடக்கக் கல்வி துறையை சார்ந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில்2012 - 2013ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு ஆசிரியர்களுக்கான தேர்தோர் பட்டியல் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல்வழங்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. உபரி ஆசிரியர்கள் கண்டெடுத்து அவர்களை உரிய இடத்தில் பணிநிரவல் செய்த பிறகு தான் பொது மாறுதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது புதுகோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ஆம் தேதியும் அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 15 ஆம் தேதியும், தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை உள்ளதாலும் அதன்பிறகு தான் பொது மாறுதல் நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பதவி உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் மீது தமிழக அரசின் தெளிவுரை கேட்டு கடிதம்?

0 Comments

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த கல்வியாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவை அடுத்த சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது 38 உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசிடம் தெளிவுரை கேட்டு இருப்பதாகவும் அரசின் தெளிவுரை பெறப்பட்ட உடன், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடக்கக் கல்வி துறையை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் சென்னையில் சமீபத்தில் நடந்த தொடக்கக் கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட வழக்குகள் பொறுத்தவரை" PASS ORDER ON MERITS "என்று இருக்கும் நிலையில் அரசாணையின் படி ஆணை வழங்க வேண்டும் என்றும், அரசாணையின் படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நிலையிருப்பின், முறையாக முறையீடு செய்தல் வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டதாக கல்வித்துறையை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

0 Comments

மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு 2012-13-ம் கல்வியாண்டில் 1-8 வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வுமுறையை அமல்படுத்தியுள்ளது. அதற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடக்கக்கல்வித் துறையில் 2011-12-ம் கல்வியாண்டு இறுதியில் (ஏப்ரல் மாதத்தில்) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கோடை விடுமுறையான மே 28-31 நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஏப்ரல் 10ம் தேதி எங்களது அமைப்பின் சார்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களைச் சந்தித்து பயிற்சிகளை 2012 ஜூன் முதல் வாரத்தில் நடத்திட கோரிக்கை விடப்பட்டது. தற்போது விடுமுறை நாளில் பயிற்சி நடத்தப்பட்டதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 நாள்களுக்கு 2012-13ம் கல்வியாண்டில் அந்நாட்களை ஈடு செய்திடும் விதமாக ஈடுகட்டும் விடுப்பு வழங்கிட வேண்டுமென எங்களது அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்.

0 Comments

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஜூன் முதல் தேதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது ஜூன் 4 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னி வெயில் முடிந்த பிறகும் யூனியன் பிரதேசங்களில் வெப்பம் தணியாமல் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU B.Ed Hall ticket June 2012 Term-End Examination.

0 Comments

அனைத்து வகை மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு அரசு கடித எண். 19032 / N / 2012 - 1, நாள். 29.5.2012.30.05.2012 மற்றும் 31.05.2012 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல் உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் மத்திய அலுவலகம் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை பள்ளிக்கல்வித் துறையை சார்ந்த அனைத்து இயக்குனரகங்களுக்கும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரே புத்தகம்.

0 Comments

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு மற்றும் மதிப்பெண் விஷயத்தில் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்று 3 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இறுதித்தேர்வில் ஆண்டு முழுவதும் படித்த அனைத்துப் பாடங்களையும் படித்து தேர்வு எழுத வேண்டும். இதனால், மாணவர்கள் அனைத்துப் புத்தகங்களையும் தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் தேர்வுச்சுமையும் இருந்தது. இந்நிலையை போக்க இந்தக் கல்வி ஆண்டு முதல் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி காலாண்டுத் தேர்விற்கான பாடங்களை அரையாண்டுக்கும், அரையாண்டு வரைப் படித்த பாடங்களை முழு ஆண்டுத் தேர்வுக்கும் படிக்கத் தேவையில்லை. இதற்காக புத்தகங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பருவத்திற்குரிய தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் இடம் பெற்றிருக்கும். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு புத்தகமும், 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு இரண்டு புத்தகம் வழங்கப்படும்.இதில் தமிழ், ஆங்கிலம் பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்தை சேர்த்து ஒரு புத்தகமாக வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்படும். இதன் மூலம்மாணவர்களின் புத்தகச்சுமை குறைந்துள்ளது. இந்தப் புத்தகங்கள் சராசரியாக 600 கிராம் எடையளவே உள்ளன. இதுவரை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் திறன் பார்க்கப்பட்டதால் மாணவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை யும் நிலவி வந்தது. இந்நிலையை மாற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்படுவது போல் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன.

0 Comments

ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.பொதுத்தேர்வும், தள்ளிப்போனது. பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, புதுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினியோகிக்கப் பட்டுள்ளன. எனவே,ஏற்கனவே அறிவித்தபடி 1ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 1ம் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது. அதன்பின், சனி, ஞாயிறுவார விடுமுறை நாட்கள். எனவே, 4ம்தேதி திங்கட் கிழமையில் இருந்து பள்ளிகளை துவங்குவதற்கு, பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.வேலை நாட்கள் விவரம் : பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்,ஜூன் 1ல் துவங்கி, 2013 ஏப்ரல் 20ம் தேதி வரை, 200 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 2013 ஏப்ரல் 30ம் தேதி வரை, 220 நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

DISE - பள்ளி அறிக்கை ஏடு ( School Report Card) அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் கிராம கல்வி குழுவிற்கும் வழங்க இயக்குனர் அறிவுரை

0 Comments

TET English Question Answer

0 Comments

பொறியியல் கல்விக் கட்டணம் நிர்ணயம்.

0 Comments

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டும், விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.ஜுலை மாதம் 9ம் தேதிதுவங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதிவரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ரூ. 32,500 கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேப்போல, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் அனுமதி பெறுபவர்களுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தாண்டு பிளஸ் 2 முடித்தமாணவர்களுக்கு கட்டாயம் லேப்டாப் உண்டு!

0 Comments

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உறுதியாக"லேப்டாப்" வழங்கப்படும், என, முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலின்போது, அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக "லேப்டாப்" வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அளவில், கடந்த ஆண்டு (2011) பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டது.அவர்களுக்கு மாவட்ட வாரியாக இலவசமாக "லேப் டாப்" வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், "லேப் டாப்" தயாரிக்கும் பணியில் ஏற்பட்ட தொய்வால், பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை. இதற்கிடையில், இந்த கல்வி ஆண்டில்(2011-2012) மாநில அளவில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவர்கள் பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதினர்.இவர்களில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டது. அவர்கள் தற்போது, தேர்வு முடிந்து பள்ளியை விட்டுசென்று விட்டதால், தங்களுக்கு அரசு அறிவித்தபடி இலவச"லேப்டாப்" கிடைக்குமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த வாரம் சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசின் இலவச திட்டங்கள் குறித்த அறிக்கை சேகரிப்பு கூட்டம் நடந்தது. அப்போது இந்த தகவல் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்கூட்டத்தில், கடந்த கல்வி ஆண்டுபிளஸ் 2 முடித்து சென்ற மாணவர்களுக்கு "லேப்டாப்" கட்டாயம் உண்டு, என அரசு உறுதி வழங்கியுள்ளது. இதற்காக, இன்று (மே 30) முதல் பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதன் பின்புறம், "லேப் டாப்பிற்கு" தகுதி பெற்ற மாணவர் என "சீல்" அடித்து தரப்படும். "லேப்டாப்" வந்தவுடன் மாணவர்களுக்கு அறிவித்து வழங்கப்பட்ட பின், மதிப்பெண் பட்டியல் பின்புறம்"வழங்கப்பட்டது" என எழுதப்படும், என்றார்.

சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் - ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது!

0 Comments

பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை "கவுன்சிலிங்", ஜூன் 30ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் கூறியதாவது: சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012 - 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்), பி.எல்., பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், 28ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள, அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் விண்ணப்பங்களை பெறலாம்.ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்பிற்கு, 1,052 பேரும், பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்பிற்கு 120 பேரும், மூன்றாண்டு பி.எல்., பட்டப் படிப்புக்கு 1,262 பேரும், பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்புக்கு, 60 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.ஐந்தாண்டு பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதியும்,மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.பி.ஏ.பி.எல்., படிப்பிற்கு ஜூன் 30ம் தேதியும், பி.எல்., படிப்பிற்கு ஜூலை 16ம் தேதியும் "கவுன்சிலிங்" நடைபெற உள்ளது. இவ்வாறு விஜயகுமார்தெரிவித்தார்.

2012 - 2013 SSAன் வின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் - இயக்குனரின் கடிதம்

0 Comments


இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

0 Comments

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள். .12.2011பொருள் :இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல்சார்பு.பார்வை :உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011 ************** பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.வினா எண்.1 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ்பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள். என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?பதில் : அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பளிகளில் (சிறுபான்மையற்றது) எந்த பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலிப் பணியிடமாக உள்ளதோ,அந்த பாடத்தினை முதன்மைபாடமாகக் கொண்டு பி.எட்.,பயின்று முடித்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.அவர்களை கொண்டே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (பாடவாரியாக) நிரப்பப்பட வேண்டும். / Sd / பள்ளிக்கல்வி இணை இயக்குநர், (இடைநிலைக் கல்வி)பெறுநர் : திருமதி. ஜீவாகமலக்கண்ணன்,நகல் : தகவல் உரிமை ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், தேனாம்பேட்டை, சென்னை - 600 018

பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு

0 Comments

கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தேதி மாற்றம்:ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு:ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரியஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.யார் எழுத வேண்டாம்?இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர்.அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை.இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.காரணம் என்ன?தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்:கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர்.இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்னை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும்தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அன்றே சொன்னது "தினமலர்!'"டி.இ.டி., தேர்வை தள்ளி வைப்பது குறித்து, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது' என்ற செய்தியை, ஏப்., 8ம் தேதி, முதல்பக்கத்தில், "தினமலர்' நாளிதழ்வெளியிட்டது. இதற்கிடையே, கடந்த 18ம் தேதி, "தேர்வு திட்டமிட்டபடி, ஜூன் 3ம் தேதி நடக்கும்; அதில், எவ்வித மாற்றமும் கிடையாது' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி பேட்டி அளித்தார். எனினும், தற்போது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஜூலை 12ம் தேதி விடுமுறை:அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில் பணிபுரியும்ஆசிரியர் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Recruitment of TamilNadu TeachersEligiblity Test - Status of your Application form

0 Comments

இன்று சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு

0 Comments

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 28) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று சென்னை மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன்ராவ் தெரிவித்தார்.நாடு முழுவதும் 8.15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் 112 பள்ளிகளில் 7,800 மாணவர்கள் எழுதியுள்ளனர்.
Click For Results

பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

மே 29 முதல் 31 வரை நடைபெறவிருக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:வரும் கல்வியாண்டில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, பல கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 402 பேருக்கு,பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.தற்போது 6,7,8 வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குவரும், 28 முதல் 31ம் தேதி வரை, நான்கு நாட்கள் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி, அனைத்து மாவட்டங்களிலும், நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டு முழுவதும் சமச்சீர் கல்வி தொடர்பான சிக்கல்களால் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத்தான் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சிக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.மே மாத இறுதியில் நடைபெற இருக்கின்ற பயிற்சியால் ஆசிரியர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர்.B.Ed., M.Ed. போன்ற கல்வியியல் பட்டப்படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதத்தில் நடைபெறுகிறது.தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு சென்றவர்கள் உடனடியாக பணியிடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் தொடர்பாக திட்டமிட்டவர்களுக்கு அவற்றில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் உடனடியாக திரும்ப இயலாத நிலைஇத்தகு காரணங்களால் மே 29 முதல் 31 வரை நடைபெறுகின்ற பயிற்சியை ரத்து செய்து ஜூன் முதல் வாரத்தில் நடத்தவேண்டும

திருவண்ணாமலையில் டி.ஆர்.பி. தேர்வு மையங்கள்மாற்றம்.

0 Comments

திருவண்ணாமலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நூர்ஜகான் வெளியிட்டுள்ள செய்தி: ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடிப் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் சில மையங்களில் தேர்வு நடத்த இடர்பாடு உள்ளது. எனவே, ஏற்கெனவே தேர்வர்களின் நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் என்று குறிப்பிட்ட நுழைவச் சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டில் உள்ள காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி என்று குறிப்பிடப்பட்ட நுழைவுச்சீட்டு பெற்றவர்கள், திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள சாரோன், ஏ.எல்.சி.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பிளஸ் 2 மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

0 Comments

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக விடைத்தாள் நகலை முழுமையாக பாட ஆசிரியர்களிடம் கொடுத்து ஆராய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறுமதிப்பீடு என்பது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணை மட்டும் ஆராய்வதில்லை. முழு விடைத்தாளிலும் வழங்கப்பட்ட மதிப்பெண்ணை ஆராய்வது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி சுமார் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகலைப் பார்த்த பிறகு, மறுமதிப்பீட்டுக்கு 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பம் செய்தனர். மறுமதிப்பீட்டின்போது பல மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் மாறுதல் ஏற்பட்டது. பல மாணவர்களுக்கு 8 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்தாலும், பல மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் வரை குறைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பொறியியல், மருத்துவ ரேங்க் பட்டியலில் இடம்பெற்றிருந்த மாணவர்கள் பல ஆயிரம் இடங்கள் பின்னோக்கிச் செல்லவும் நேரிட்டது. பிளஸ் 2 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியது: தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காகவும், விடைத்தாள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காகவும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் முறை அமலில் உள்ளது. விடைத்தாள் நகலில் குறிப்பிட்ட பக்கங்கள் திருத்தப்படவில்லையென்றாலோ, சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லையென்றாலோ மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்குவிண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, தங்களது விடைத்தாளை அந்தப் பாடங்களுக்கான ஆசிரியர்களிடம்வழங்க வேண்டும். விடைத்தாளில் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதை அவர்கள் கணக்கிட வேண்டும். அதேபோல, பிற கேள்விகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணையும் அவர்கள் கணக்கிட வேண்டும். அந்த விடைத்தாளில் உள்ள விடைகள் அனைத்தும் தவறில்லாமல் சரியாக உள்ளனவா என்பதை அந்த ஆசிரியரும், மாணவரும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக விடைத்தாளை ஆராய்ந்த பிறகு அவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கும் மதிப்பெண், தவறான விடைகளுக்கு கழிக்கப்படும் மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். அதன்பிறகும், கூடுதலாக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே அவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏனென்றால், உயிரியல் போன்ற முக்கியப் பாடத்தில் 2 மதிப்பெண் அதிகமாகக் கிடைத்தால் ரேங்கில் முன்னேற்றம் கிடைக்கும் என்று ஒரு மாணவர் விண்ணப்பிக்கலாம். அந்த மதிப்பெண் மாணவருக்குக் கிடைத்தாலும், பிற விடைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் குறைந்தால் ஒட்டுமொத்தமாக அவரது மதிப்பெண் குறைந்துவிடக் கூடும். எனவே, விடைத்தாள் நகலை முழுமையாக ஆராயாமல் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. மறுமதிப்பீட்டில் வழங்கப்படும் மதிப்பெண்ணே இறுதியானது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - தமிழக அரசு ஆணை.

0 Comments

அரசாணை (நிலை) எண்.121 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.17.05.2012.1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு கடும் தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.2. சமபந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்துகல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.3. பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.4. ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம்தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள்வழங்கப்பட வேண்டும்.5. பள்ளி மாணவ மாணவிகளின் மனநிலை பாதிக்கும் பிரச்சனைகளை களைவதற்கான உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கென பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, இதன் மூலம் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலையின் எஸ்இடி தேர்வு முடிவு.

0 Comments

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய மாநில  தகுதித் தேர்வு (எஸ்இடி)க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் பதிவு எண்களை பாரதியார் பல்கலைக்கழகம் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளது.
TO VIEW SET - 2011 EXAMINATIONSCLICK HERE....

பள்ளிக்கல்வி - மேல்நிலைத்தேர்வு - ஜூன், ஜூலை 2012, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு - மாணவர்களுக்கு SH படிவம் வழங்க உத்தரவு.

0 Comments

அரசு தேர்வுகள் இயக்க இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 011936 / எச்1 / 2012, நாள். 16.05.2012பள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - ஜூன், ஜூலை 2012, மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு - மாணவர்களுக்கு SH படிவம் வழங்க உத்தரவு.தேர்வு கட்டணம் பின்வருமாறு.ஒரு பாடத்திற்கு : ரூ.85/-இரண்டு பாடங்களுக்கு : ரூ. 135/-மூன்று பாடங்களுக்கு : ரூ. 185/-நான்கு பாடங்களுக்கு : ரூ. 235/-ஐந்து பாடங்களுக்கு : ரூ. 285/-ஆறு பாடங்களுக்கு : ரூ. 335/-

பள்ளிக்கல்வி - இலவச மடிக்கணினி - +2 மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் பதிவு செய்வது குறித்து அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 476 / வி2 / இ1 /2011, நாள்.21.5.2012.பள்ளிக்கல்வி - இலவச மடிக்கணினி - 2011 - 12ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது - +2 மதிப்பெண் சான்றிதழின் பின்புறம் பதிவு செய்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

CCE பயிற்சி - விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.

0 Comments

மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 25.05.2012.ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும்தற்போது எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால்அந்த மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில்கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.தற்போது சில ஆசிரியர்களுக்குதொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்குஅளிக்கலாம் எனமாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

0 Comments

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.20122012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், சி றப்பு ஆசிரியர்கள், ஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட மாறுதல் வழங்கும் பொது மாறுதல் கலந்தாய்வுகள் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை - 600 044நாள் : 02.06.2012 முதல் 07.06.2012.பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் வாரியாக அட்டவணையின் படி நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களுக்கானமாவட்ட மாறுதல் கலந்தாய்வு.
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 311 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...

டி.இ.டி., தேர்வில் யாருக்கு விலக்கு? ஆசிரியர் பலரும் குழப்பம்

0 Comments

டி.இ.டி., தேர்வில் இருந்து, யார், யாருக்கு விலக்கு என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான விளக்கம் அளிக்காததால், நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்த, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும் என, டி.ஆர்.பி., ஆரம்பத்தில் தெரிவித்தது. அறிவிப்பு தற்போது, என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை என, 22ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.நாளிதழ்களில், மிகச்சிறிய அளவில், விளம்பரமாக இந்த அறிவிப்பு வெளியானது. பலருக்கு இது தெரியவில்லை; விளம்பரத்தை பார்த்த ஆசிரியர்களும் சரிவர புரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்டபடி உள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய அறிவிப்பை, பெரியஅளவில் வெளியிடாதது ஏன் என்றும், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.படையெடுப்பு இது தொடர்பாக விளக்கம் கேட்க, நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர். அவர்களிடம், டி.ஆர்.பி., அலுவலர்கள் விளக்கிக் கூறினர். விலக்கு அளிக்கப்பட்ட ஆசிரியர் பெயர் பட்டியலை, இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட வேண்டும்; சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்பது, விண்ணப்பதாரர்களின் கருத்தாக உள்ளது.தெளிவான விளக்கம் இது குறித்து,டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:அறிவிப்பில், எங்களது விளக்கத்தை தெளிவாகக் கூறியுள்ளோம்.ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் பணி நியமனம்தொடர்பான வேலைகள், ஒரு ஆண்டுக்கு முன்பே துவங்கியிருக்கும். இப்படிப்பட்ட ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.மொத்தம், 6.50 லட்சம் பேரில், விலக்கு அளிக்கப்பட்டவரின் பெயர் பட்டியலை, தற்போது தேட முடியாது. 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தபின், இதுதொடர்பாக முழுமையான விளக்கம் தரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCERT - CCE TRAINING PROGRAMME SCHEDULE FOR UPPER PRIMARY HMs & TRs.

0 Comments

State Council of Educational Research and Training.2Days CCE Training for Upper Primary HMs & TRs.First Spell : 28th and 29th of May.Second Spell : 30th and 31st ofMay.2 Days Programme :-Day I : 9.30am to 5.30pm.Day II : 10.00am to 5.00pm.

குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

0 Comments

குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை 9.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை, ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.எனவே, கடைசி தேதிக்குள், விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயரலாம் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகளில், 10 ஆயிரத்து 718 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில் போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கு, ஏப்ரல் 27 முதல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கடைசி நாள் 28ம் தேதியுடன்முடியும் நிலையில், ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இது குறித்து, தேர்வாணையச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது,"இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தினமும், 60 ஆயிரம் பேர் முதல் 70 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். எனவே, அனைவருக்கும் போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், காலக்கெடுவை ஜூன் 4 வரை நீட்டித்துள்ளோம்.விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை, ஜூன் 6 வரை செலுத்தலாம்.கடைசி தேதிக்குள், மொத்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை 13 லட்சம் வரை உயரலாம்,'' என்றார்.

6 பாடங்களில் தோல்வி அடைந்தாலும் துணை தேர்வு எழுதலாம் : அரசு.

0 Comments

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜுன் மாதத்திலேயே தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.பொதுவாக கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இந்த துணைத் தேர்வை எழுதி வரும்கல்வியாண்டிலேயே உயர்கல்வியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் இருந்து 6 பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும் துணைத் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, 1 பாடத்துக்கு ரூ.85 வீதம் 6 பாடங்களுக்கு ரூ.3354ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப்பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். மே 28ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

.மாறுதல்கலந்தாய்வு நெறிமுறைகள் (24.05.2012)

0 Comments

பிளஸ் 2 உடனடித் தேர்வுகள்துவக்கம் - அரசு தேதி அறிவிப்பு.

0 Comments

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. ஒரு லட்சம் பேர், இத்தேர்வை எழுதுகின்றனர்.ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் தேர்வெழுதியதில், 86.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 870 பேர் தோல்வி அடைந்தனர்.உடனடித் தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என, ஏற்கனவே இருந்த விதிமுறையை மாற்றி, அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்கள், உடனடித் தேர்வில் பங்கேற்கலாம் என, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.

CCE பயிற்சி 6,7,8 வகுப்பு அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள தமிழக அரசு உத்தரவு.

0 Comments

தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012.அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதீப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. பதிவிறக்கம் செய்ய...
இது குறித்து செய்தி நமது இணையதளத்தில் நேற்றே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நேற்றைய செய்தியை பார்க்கவும

அரசாணை எண். 130, பள்ளிக்கல்வித்துறை நாள்.17.04.2012

0 Comments

தொடக்கக்கல்வித் துறையை சார்ந்த 21 தமிழ் பட்டதாரி, 25 பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் 100 இடைநிலை ஆசிரியர் தற்காலிக ஆசிரிய பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை எண். 130, பள்ளிக்கல்வித்துறை நாள்.17.04.2012 பதிவிறக்கம் செய்ய....

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 198.50.

0 Comments

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உள்பட மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,695 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர ஒவ்வொரு ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கடினமாக அமைந்து ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்ததால், எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் 0.25 அளவுக்குக் குறைந்துள்ளது. செங்கல்பட்டு காரணமாக....1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 50-லிருந்து, நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) 100-ஆக அதிகரித்து மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையும் 1,653-லிருந்து 1,695-ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 1,695 எம்.பி.பி.எஸ். இடங்களில், முற்பட்ட வகுப்பினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் (பொதுப் பிரிவினர்) மொத்தம் 526 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்புக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ மொத்தம் 16 பேர் எடுத்துள்ளனர்;200-க்கு 199.75-ஐ 57 மாணவர்கள் எடுத்துள்ளனர்; இப்படி கட்-ஆஃப் மதிப்பெண் குறைய குறைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுப் பிரிவினருக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் விரைவில்எட்டப்பட்டு விடுகிறது. அதாவது,கட்-ஆஃப் மதிப்பெண் 199-க்கும் 198.50-க்கும் இடையில் 290-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்று பொதுப் பிரிவினருக்கு உரிய 526 எம்.பி.பி.எஸ். இடங்கள் பூர்த்தியாகி விடும் சூழ்நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.... எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில்சராசரியாக 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 முதல் 197-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகியோருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களும் கடந்தஆண்டைக் காட்டிலும் 1 முதல் 2 மதிப்பெண் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு கட்-ஆஃப் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆண்டு (2011-12) முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: பொதுப் பிரிவு (ஓ.சி.)-199; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)-197.75; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் (பி.சி.எம்.)-196.50; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)-196.25; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-192. 25; தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினர் (எஸ்சிஏ)- 188. 25; பழங்குடி வகுப்பினர் (எஸ்டி)-189.25. உங்களுடைய கட்-ஆஃப் என்ன?சென்னை, மே 23: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரியஇயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 200-க்கு 198.50 வரை எடுத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் - மொத்த மாணவர்கள் 200-க்கு 200 -16 200-க்கு 199.75 -57 200-க்கு 199.5 -88 200-க்கு 199.25 -99 200-க்கு 199 -102 200-க்கு 198.75 -146 200-க்கு 198.50 -140

கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!

0 Comments

கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட்23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை.( இவ்வறிப்பினை நம் இணையதளத்தில் மிக தெளிவாகநேற்றே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .)இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இதன்மூலம், முந்தைய ஆட்சியில்அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய்திருப்பி தரப்படுமா என்பது தெரியவில்லை.

தொடக்கக் கல்வி - ஆங்கில வழி இணைப்பள்ளிகள் - ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி தெரிவு செய்ய உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 11640 / இ1 / 2012, நாள். 21.05.2012முதல் வகுப்பில் அதிக மாணவர்களை எண்ணிக்கை கொண்ட ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் பள்ளிகளை தெரிவு செய்து விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

CCE TEACHERS' MANUAL FOR UPPER PRIMARY ENGLISH STD VI TO VIII - TERM 1

0 Comments

தொடக்கக் கல்வி - ஆங்கில வழி இணைப்பள்ளிகள் - ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி தெரிவு செய்ய உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 11640 / இ1 / 2012, நாள். 21.05.2012முதல் வகுப்பில் அதிக மாணவர்களை எண்ணிக்கை கொண்ட ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் பள்ளிகளை தெரிவு செய்து விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம்.

0 Comments

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று முதல் மே 25ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் இடங்களில் நீண்டவரிசைகளில் மாணவர்கள் நின்று டிடியை செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்புகளில் ஒரு சில மதிப்பெண்கள் அதிகரித்தால் கூட ரேங்க் பட்டியலில் முன்னணியில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மாணவர்கள் அதிகளவில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத /விவகாரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு ஆணை.

0 Comments

திருத்தம்நிதித்(ஓய்வூதியம்) துறை அரசாணை எண். 165 நாள்.21.05.2012ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவகாரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் இவ்வாணை வெளியிடப்படும் நாளிலிருந்து வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

நிதித்(ஓய்வூதியம்) துறை அரசாணை எண். 165 நாள்.21.05.2012 பதிவிறக்கம் செய்ய....

FREE performance analysis for Students and Schools

0 Comments

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.

0 Comments

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.பயிற்சி நடைபெறும் நாள்.28.05.2012 முதல் 31.05.2012 வரைபயிற்சி நடைபெறும் இடம் :நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் இடம் அனைத்து வசதிகளுடன் (குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமுள்ள பயிற்சியறை) உள்ளதாக இருத்தல் வேண்டும்.இப்பயிற்சிக்கு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிற்றுவிக்கும்அனைத்து பாட ஆசிரியர்களும் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தவறாது அழைக்கப்பட வேண்டும்.எந்த காரணத்தை கொண்டும் எந்தவொரு ஆசிரியருக்கும் பய்ர்சியளிக்கபடாமல் விடுபடுதல் கூடாது.* தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பொது அமர்வாக வகுப்பு நடத்தி முடிக்க வேண்டும்.* ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சமாக 60 நபர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.* பொது அமர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன், அடுத்த அமர்வில் பாடவாரியாக பங்கேற்பாளர்களை அமர வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

பி.இ., எம்.பி.பி.எஸ்.: கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்.

0 Comments

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். பி.இ. படிப்பைப் பொருத்தவரை மிக அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், கடந்த ஆண்டைவிட 1 மதிப்பெண் வரை குறைய வாய்ப்புள்ளது. அதாவது, இந்த ஆண்டு பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 முதல் 200-க்கு 185 வரை எடுத்துள்ளவர்களுக்கு பி.இ.படிப்பில் சேரும்வாய்ப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 1 மதிப்பெண் வரை குறையும் சாதக நிலை உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 185-க்குக் கீழே எடுத்துள்ளவர்களுக்கு, கடந்த ஆண்டைக் காட்டிலும் கட்-ஆஃப் மதிப்பெண் அதிகபட்சம் 2 மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. சராசரியாக 15,000 மாணவர்கள்: பி.இ. படிப்பைப் பொருத்தவரை 200-க்கு 200 கட்-ஆஃப் மதிபெண்ணில் தொடங்கி, 200-க்கு 190 கட்-ஆஃப் மதிப்பெண் வரை ஒவ்வொரு ஆண்டும் 15,000 மாணவர்கள் இடம்பெறுகின்றனர். 200-க்கு 200-ல் தொடங்கி ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே சராசரியாக 50 மாணவர்கள், 100 மாணவர்கள், 150 மாணவர்கள் எனகீழ் நிலையில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும். இந்த அடிப்படையில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பாடப் பிரிவு இடங்களும் நிரம்பிவிடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் என்ன ஆகும்? கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ. படிப்புக்கு உரிய கணிதம்-இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 120 மாணவர்களும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்களும் எடுத்திருந்தனர். இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில்முதல் கட்ட கலந்தாய்வின்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரியகட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது; அதாவது எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆகவும் குறைய வாய்ப்புள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் குறைவுக்குக் காரணம் என்ன? பி.இ. மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 142 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்றுள்ளனர். பி.இ. படிப்புக்கு உரிய கணிதத்தில் 2656 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிதத்தில் சதம் அடித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 64 பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், ஏராளமான மாணவர்களுக்கு பி.இ. மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்பின் கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும் இயற்பியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்திருந்தாலும்கூட, இயற்பியலில் குறைந்த மதிப்பெண்ணை வேதியியலில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் சரி செய்துவிட்டது. இதனால் இயற்பியல் மதிப்பெண் குறைவு காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் பாதிப்பு இந்த ஆண்டு ஏற்படவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர். 2005 முதல் 2012 வரை... பிளஸ் 2 தேர்வில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த ஆண்டு (2012) வரை கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம்: பாடம் 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 கணிதம் 2611 855 1568 3852 4060 1762 2720 2656 இயற்பியல் 1131 17 217 282 245 231 646 142 வேதியியல் 1677 119 145 306 467 741 1243 1444 உயிரியல் 1227 81 129 153 218 258 615 620 எம்.பி.பி.எஸ்.: பழைய மாணவர்கள் ஆசை நிறைவேற ரூ.5 லட்சம்! எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் சேர விரும்பினால், பிடிஎஸ் படிப்பு உள்பட வேறு மருத்துவம் சார்ந்த படிப்பிலிருந்து விலக ரூ.5 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஏராளமான மாணவர்கள் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்தும்கூட எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அத்தகைய மாணவர்களில் பலர் பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதால், பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர். இத்தகைய மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் இந்த ஆண்டு சேர ரூ.5 லட்சத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும். 35 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனை: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்த ஆண்டு கடந்த மே 15-ம் தேதி முதல் விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு விநியோகித்து வருகிறது. முதல் கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்களும் அவை தீர்ந்துபோய் அடுத்த கட்மாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் என மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார். 200-க்கு 200 பி.இ.-35 மாணவர்கள்; எம்.பி.பி.எஸ்.-16 மாணவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2தேர்வில் பி.இ. படிப்புக்கு உரிய முக்கிய பாடங்களில் (கணிதம்-இயற்பியல்-வேதியியல்) 35 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களில் (உயிரியல்-இயற்பியல்-வேதியியல்) 16 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பி.இ. படிப்புக்கு உரிய பாடங்களில் 120 பேரும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களில் 65 பேரும் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்தனர். இந்த ஆண்டு இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்.

0 Comments

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுக்கு புதன்கிழமை (மே 23) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். சிறப்புத் துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.85-ம் கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 சேர்த்துக் கட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள், இந்த மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வுக்கு "நஏ' என்று குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே மே 23 முதல் மே 28 வரைபெறலாம். மே 28-க்குள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்களாக எழுதும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறு மதிப்பீடுவிண்ணப்பம் பெற...

0 Comments

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் தங்களது தேர்வு முடிவிலோ அல்லது மதிப்பெண்ணிலோ தவறு இருக்கலாம் என்று கருதினால் விடைத்தாள் நகல் பெறலாம். அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற 25ம் தேதி 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் விண்ணப்பங்கள் 5 இடங்களில் அளிக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டைமாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.மாவட்டக் கல்விஅலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,சூளைமேடு.மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.தமிழகத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி), புதுச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்ஆனால்,சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அமைந்துள்ளஅரசு தேர்வுத்துறை அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்திலோ விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் விநியோகம்

0 Comments

பிளஸ் 2-க்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் வரும் 30ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்‌கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய பள்ளியில் மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடுநடைமுறையில் மாற்றம்பிளஸ் 2 தேர்வு முடிவு நடைமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முதல் நாளே, முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் "சிடி'யாக வழங்கப்படும்.அலுவலர்கள், "சிடி' யில் உள்ள விபரங்களை தொகுத்து, பள்ளி வாரியாக பிரின்ட் எடுத்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை வரவழைத்து வழங்குவது, கடந்தாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதன் மூலம், தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே, பல இடங்களில் முடிவுகள் தெரிந்து விடுகிறது.இதை கட்டுப்படுத்த, "தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடும் போது, அந்தந்த பள்ளிகள் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் அலைய வேண்டியதில்லை,' என, புதிய நடைமுறையை தேர்வுத்துறை அமல்படுத்தி உள்ளது.முந்தைய முறையில், முதன்மை கல்வி அலுவலகத்திலே பள்ளி முடிவுகளை எடுத்து, மாவட்ட அளவில் முதன்மை பெறுபவர்கள் பட்டியல் உடனயாக பெற முடிந்தது. தற்போதைய நடைமுறை மாற்றத்தால், பள்ளிகளுக்கு எளிமையாக இருந்தாலும், மாவட்டஅளவில் முதன்மை பெற்றவர்களை கண்டறிவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TET தொடர்பானதிருத்த அறிவிப்பு வெளியீடு

0 Comments

23.08.2010 முன்பே (அதாவது 22.08.2010 அன்றோ அதற்கு முன்போ) ஒரு நபருடைய பணியமர்வுக்கான (அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் பணி )  செயல்பாடு முறையான அறிவிப்பின் மூலம்  தொடங்கி இருந்தால், அவருக்கு TET எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அந்நபர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுஇருக்கவேண்டும்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுத்துத் தேர்வு மாற்றம்

0 Comments

ஜுன் மாதம் 9, 10ம் தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1 எழுத்துத் தேர்வு, ஜுலை 28, 29ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது-அதேப்போல, ஜூலை 28ம் தேதி நடைபெற இருந்த சார்நிலைப் பணித் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், மே மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், அவர்களுக்கான நுழைவுச் சீட்டையும் இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் மதிப்பெண்களா... விலைமதிப்பில்லா உயிரா

0 Comments

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்தால் இரட்டிப்பு சந்தோஷம். மதிப்பெண் குறைந்துவிட்டது அல்லது எதிர்பாராதவிதமாக தோல்வி ஏற்பட்டு விட்டது என்றால் மனம் தளரக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது.தோல்வியே வெற்றிக்கான முதல் படிக்கல் என்று தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும். இதனை பெற்றோரும், மாணவர்களும் புரிந்து கொள்வது அவசியம்.அன்னை வயிற்றில் இருந்து, அழுது கொண்டே வெளியில் வந்தால் தான், பிள்ளை இப்பூமியில் வாழும். மூச்சுக்காற்றுக்கு ஏங்கி அழுகை எனும் தோல்வியை வெளிப்படுத்தும் போது தான், சுவாசம் சீராகிறது. வாழ்வு சுகமாக தொடர்கிறது.பெற்றோராகிய நாம், பிள்ளையின்அழுகையை ஆனந்தக் கண்ணீரோடு, அரவணைத்து ஏற்றுக் கொள்கிறோம். இந்த அரவணைப்பு, காலம் முழுதும் தொடர வேண்டாமா? கீழே விழுந்தால் மனம் பதறி, பிள்ளைக்கு அடிபட்டிருக்கிறதா என்று தானே பதறுகிறோம்.பிளஸ் 2 தேர்வில் தோற்றாலும், மதிப்பெண் குறைந்தாலும் கீழே விழுவது போல் தானே. விழுந்த பிள்ளையை தூக்கி, ஆறுதல் படுத்த வேண்டாமா? பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளை, ஆறுதல் கூறி தேற்றுங்கள். மாணவச் செல்வங்களே... உங்களை விட, உலகத்தில் உயர்ந்த செல்வம், பெற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள்."தோல்வியினால் துவண்டு நிற்கும் பிள்ளையிடம், அன்பு, அரவணைப்பு, ஆறுதல் தரவேண்டியது, பெற்றோரின் கடமை' என்கிறார், மனநல டாக்டர் சி. ராமசுப்ரமணியன்: தேர்வில் எதிர்பார்த்தது நடக்காவிட்டால், மாணவனுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் தோல்வி, அவமானம், மனச்சோர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் ஏற்படும். இதைக் கடந்து வரவேண்டியது தான் முதலில் செய்ய வேண்டிய வேலை.பிள்ளையின் மீது வைத்த நம்பிக்கை தளர்ந்து போய், பெற்றோரின் சுயகவுரவம் பாதிக்கப்பட்டதாக நினைக்கலாம். ஆனால் அதைப் பிள்ளையிடம் காண்பிப்பது ஆபத்தானது. பாரம் தாங்காமல் வண்டிமாடு கீழே விழுந்தால், அதற்கு தண்ணீர் காண்பித்து தட்டி கொடுப்பது தான் சரியான அணுகுமுறை. விலங்குகளுக்கே ஆதரவு தேவைப்படும் போது, நமது ரத்தபந்தமாம் பிள்ளைக்கும் தேவைப்படும், என்பதை உணருங்கள்.நண்பர்களைப் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியே செல்லாமல், அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும் பிள்ளையை, வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். உள்மனக்காயம் ஆறும் வரை, ஆறுதல் கூறுங்கள். இப்போதைக்கு உங்கள் பிள்ளைகளுக்குத் தேவை, அன்பானபேச்சு, ஆறுதலான அரவணைப்பு தான். எதனால் மதிப்பெண் போயிற்று என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.பிள்ளையை உணரவைத்து, அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயார்படுத்த வேண்டும். தடுக்கி விழுவது தவறல்ல. விழுந்தவனை கரம் நீட்டி, தூக்கி விடுவது தான், பண்பு. ஒரே ஒரு தோல்வி, மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்காது. சாதனையாளர்களும், வெற்றியாளர்களும் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்வதில்லை. தோல்விக்குப் பின் வெற்றி நிச்சயம் என்பதை, பிள்ளையை உணரவையுங்கள்.பையனின் திறமையை புரிந்து கொண்டு, ஆற்றலை அறிந்து, அதற்கேற்ப உங்கள் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டால், ஏமாற்றம் ஏற்படாது. உங்களது ஆசையை, பிள்ளையிடம் திணிப்பதுநியாயம் அல்ல. பக்கத்து வீட்டு பையன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று, உங்கள் பிள்ளை சுமாரான மதிப்பெண் பெற்றாலும், தயவுசெய்து ஒப்பிட்டு பேசாதீர்கள். இது ஒட்டுமொத்த தன்னம்பிக்கையை சாகடித்துவிடும்.நல்ல மதிப்பெண் பெறாத பிள்ளை, நல்ல மனிதனாக இருக்கலாம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமுள்ளவனாக இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கலையில் திறமையாளனாக இருக்கலாம். அதைக் கண்டறிந்து, அந்த திசையை நோக்கி, பிள்ளையை உருவாக்குங்கள். இவ்வாறு கூறினார்.வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது:"மாணவர்களே...பிளஸ் 2 வில் மதிப்பெண்கள் குறைந்தாலும், அதோடு உங்கள் வாழ்க்கை முடிந்து விடாது. நீங்கள் செல்ல நினைக்கும் திசை தான் மாறும்,'' என்கிறார், குழந்தைகள் மனநல டாக்டர் தீப்கூறியதாவது:தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத போது, தவறான முடிவு எடுக்கின்றனர் என்றால் பெற்றோர், தன்னம்பிக்கை அளிக்கவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் இருந்தே வெற்றி, தோல்விக்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும். சிறு சிறு பிரச்னைகளை பிள்ளைகளாக சமாளிக்கும் வகையில், பழக்க வேண்டும். "பிளஸ் 2 மதிப்பெண் தான், வாழ்க்கையை தீர்மானிக்கிறது. முக்கியமான கட்டம் இதுதான்.தோற்றால் வீட்டிற்குள் நுழையாதே. முகத்தில் முழிக்காதே,&' என, பெற்றோர் கூறினாலும், உங்கள் மேல் வைத்த பாசம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ரோடு பிரியும் இடத்தில் சிறு குழப்பம் நேரும் போது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டியாக, பெற்றோர் உணர்த்த வேண்டும். பொதுத்தேர்வு என்பது முட்டுச்சந்து அல்ல. வாழ்க்கைஅங்கேயே நின்று போவதற்கு. இந்தத் தேர்வில் தோற்றால், அடுத்த மூன்றே மாதங்களில் மீண்டும் படித்து வெற்றி பெறலாம்.ஒரு மதிப்பெண்ணில், முதலிடம் போய்விட்டது என்றாலும் பதறவேண்டாம். வெறும் மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது. பள்ளியில், மாவட்டத்தில், மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற நினைக்கலாம். நடக்காத பட்சத்தில், மனதை அமைதிப்படுத்துங்கள். ஒரு மதிப்பெண்ணுக்காக, விலைமதிப்பில்லா உயிரை பணயம் வைக்காதீர்கள். மனம் பதறும் போது, பெற்றோரின் முகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். அடுத்த முறை வெற்றி நிச்சயம் பெறலாம் என்றார்.இலவச ஆலோசனை பெற: தோல்வி பயம், அவமானம் குறித்து யாரிடமும் பேச பிடிக்கவில்லையா... "உதவி' அமைப்பை (உயிர்ச் சேதம் தடுக்கும் விழிப்புணர்வு) 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பெற்றோர், பிள்ளைகள் மனதில் குழப்பம், மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் இருந்தால், தயங்காமல்மனம் விட்டு பேசலாம். மனநல டாக்டர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர். 98421 78739,98940 52543 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை

0 Comments

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள, 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 2012-13ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை இன்று (21ம் தேதி) துவங்குகிறது.சென்னையில், தரமணி மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.10ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள்,150 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், தலா 25 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பங்கள்இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள், சான்றளிக்கப்பட்ட தங்களின் ஜாதி சான்றிதழின் நகலை கொடுக்க வேண்டும்.விண்ணப்பத்தை,www.tndte.comஎன்ற இணையதளத்திலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5 இடங்களில் விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பங்கள் விற்பனை

0 Comments

சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என, அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:1. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.2. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.3. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.4. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.5. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்ஆகிய ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்தவிண்ணப்பத்தை, வரும் 25ம் தேதிமாலை, 5.45 மணிக்குள் விண்ணப்பத்தினை பெற்ற அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.இவ்விண்ணப்பங்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு தேர்வுகள்மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்திலோ வழங்கப்படாது. இவ்வாறு, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள், அடையாளம் தெரியாத நபர்கள் ஏவரேனும் தொடர்பு கொண்டு, தவறான வழிகாட்டுதலால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறினால், அதை மாணவர்கள் நம்பி ஏமாற வேண்டாம். இத்தகவலை, அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள், 3 நாட்களுக்கு வினியோகம் இல்லை

0 Comments

அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்அச்சடிக்கும் பணி நடப்பதால், வரும் 23ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படாது என்றும், 24ம் தேதி முதல் வினியோகம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாணவர் சேர்க்கைக்காக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகம், தகவல் கையேடு, கோடிங் ஷீட்டுகள், விண்ணப்பங்கள் ஆகியவை 2 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இம்மாதம் 19ம் தேதி வரை, 2 லட்சம் விண்ணப்பங்களும் விற்றுவிட்டன.மேலும், 40 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட்டு, அவற்றை 59 மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் வழங்கப்படமாட்டாது.அனைத்து மையங்களிலும், இம்மாதம் 24ம் தேதி முதல் 31ம்தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: வினா-விடை

0 Comments

10th & 12th ரிசல்ட் உங்கள் மொபைலில் பெற

0 Comments

தினமலர் - TET இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

0 Comments

Click Here and register Your Details To Take Test
கல்வி உரிமை சட்டம், பிரிவு 2(n) கீழ் அனைத்து பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது முக்கியமான தகுதிகளில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே.தமிழ் நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்கு உதவியாக தினமலர், கல்விமலர் மற்றும் எவரோன் இணைந்து இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு மே 18 முதல் மே 20 வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வானது, தேர்வு எழுதும் தேர்வாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு நடத்தப்படுகிறது.தாங்கள் இந்த இலவச மாதிரி தேர்வை கீழ்கண்ட இடங்களில் எடுத்து கொள்ளலாம்:மாதிரி தேர்வு மையங்கள் இந்த மாதிரி தேர்வானது இரண்டுவினாத்தாள்கள் கொண்டது: Paper I, Paper II (கணிதம் மற்றும் அறிவியல்) & Paper II (சமூக அறிவியல்). மேலும் மொழி தாளானது தமிழில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு பயிற்சியானது உங்களின் அறிவு திறனையும் மற்றும் தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் அறிந்துகொள்ள உதவும். இந்த தேர்வின் முடிவுகள், மற்றும் அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தாங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளையும் தெரிவிப்பதன்முலம் TNTET தேர்வை எளிதாக அணுக உதவும்.இந்த தேர்வின் முடிவுகள் SMS மற்றும் EMAIL மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். தாங்கள் இந்த இலவச தேர்வினை தங்களது இல்லத்திலிருந்தும் இணையதள மையங்கள் (browsing centre) மூலமாகவும் எடுத்து கொள்ளலாம்.தாங்கள் இந்த இலவச மாதிரி தேர்வை கீழ்கண்ட இடங்களில் எடுத்து கொள்ளலாம்:

Direct Recruitment of Post Graduate Assistant in Govt.Higher Secondary School 2011 -12

0 Comments

பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு

0 Comments

தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளிஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்த கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனே வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காலிப்பணியிட விபரங்களை உடனடியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்றுபள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

மாற்றப்பட்ட 20 முதன்மைக் கல்வி அலுவலர்களின் விவரம்

0 Comments


கன்னியாகுமரி குலுங்கியது 10 ஆயிரம் ஆசிரியர்கள் பேரணி

0 Comments

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று மாலை 10 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று மாலை ஆசிரியர், ஆசிரியைகளின் பிரமாண்ட பேரணி நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முருக செல்வராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் அபிஜித் முகர்ஜி தொடங்கி வைத்தார். பேரணியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பேரணியில் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், உருமி மேளத்துடன் தேவராட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பேரணியால் போக்குவரத்து 1 மணி நேரம் தடைபட்டது. டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நிறைவில் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்பு குழுவின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.சியுமான மாயவன் வரவேற்றார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சி.என்.பாரதி ஆகியோர் மாநாட்டு முடிவுகளை விளக்கினர். சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் ஏ.கே.பத்மநாபன், பி.கே.பிஜு எம்.பி., முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ், அனை த்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ராமச்சந்திரன், மதுரை காமராஜர் பல்கலை ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு பொருளாளர் கே.பூபாலன் நன்றி கூறினார்.

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2012 - HALL TICKETS.

0 Comments

அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் -தமிழக அரசு அறிவிப்பு.

0 Comments

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 299 நாள். 19.05.2012அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்நியமனத்திற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு முதற்கட்டமாக 11432 பணியிடங்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் :-* பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.* அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் 25 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.* உதவியாளர்கள் நியமனத்திற்கு 25 - 35 வயதிற்குள் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.* .அங்கன்வாடி பணியாளர் பணிக்குரூ.2500-5000 + தர ஊதியம் ரூ.500/- என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ரூ.1800-3300 + தர ஊதியம் ரூ.400/- என்ற விகிதத்திலும்,உதவியாளர் பணிக்கு ரூ.1300-3000+ தர ஊதியம் ரூ.300/- என்ற விகிதத்திலும் உரிய படிகளுடன் வழங்கப்படும்.* விண்ணப்பம் வழங்கும் நாள், விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி நேர்முகத் தேர்வு மற்றும் இதர விபரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களால் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.* அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய...* தமிழக அரசின் செய்தி வெளியீடுஎண். 299 நாள். 19.05.2012 பதிவிறக்கம் செய்ய...

நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

0 Comments

தமிழகத்தில் அண்மையில் புதியதாக தொடக்கக் கல்வி இயக்குனராக பதவி ஏற்ற திரு. இராமேஸ்வரன் முருகன் அவர்கள் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொடக்கக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை, தேர்ந்தோர் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை தன்னுடைய தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் உடனுக்குடன் முடித்து வைக்கிறார் என்றும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளாதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் மீது சிறப்புகவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மீது தனிகவனம் செலுத்தி உடனுக்குடன் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் ஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் முன்னுரிமைபட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

0 Comments

முன்னுரிமை பட்டியல், பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் அனைத்து ஒன்றியங்களிலும் சரியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,தயாரிக்கப்பட்ட பட்டியல்களை ஒன்றியம் மாற்றி சரிப்பார்க்கப்பட்டு, சரியாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளதாக கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவச கட்டாய கல்வி - அரசின்நடவடிக்கை குறித்து பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

0 Comments

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பாக, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அயப்பாக்கம் வேலம்மாள் பள்ளி, சின்மயா நகர் வித்யாலயா பள்ளி, மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேஷன் வித்யாலயா, ஆதம்பாக்கம் டி.ஏ.வி., ஆகிய நான்கு பள்ளிகளுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.அனுமதி இல்லை:இந்த மனுக்களில், அயப்பாக்கத்தை சேர்ந்த சேதுவராயர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு, கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதில், நலிந்த பிரிவினருக்கு, அருகில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதன்படி, என் மகள் சுவாதியை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால், பள்ளியில் சேருவதற்கான அனுமதியை பள்ளி வழங்கவில்லை. பள்ளியின் சேர்க்கையும் முடிந்தது. மேலும், இது சம்பந்தமாக, பள்ளி நிர்வாகம் மற்றும் அரசிடம், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தேன். அதற்கு, இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.உத்தரவு:மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, என் மகளுக்கு முழு தகுதியும் உள்ளது. கட்டாய இலவசக் கல்வி சட்டத்தினை, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என, பல வழக்குகள் தொடரப்பட்ட பின்தான், அரசு அதை அமல்படுத்துவதற்கான முயற்சியைஎடுத்தது.ஆகையால், என் மகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் சேர, பள்ளி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனு மீதான விசாரணை, வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி, நலிந்த பிரிவினருக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இடம் ஒதுக்குவது தொடர்பாக, அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என, நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார்.

மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவது கட்டாயம்.

0 Comments

மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்கூறியுள்ளார்.இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.இந்தியாவில் படித்துவிட்டு பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு விபரங்கள் மத்திய அரசுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதன்பொருட்டு, படிப்பு முடிந்து பணியை ஆரம்பிக்கும் மருத்துவர்கள், தங்களைப் பதிவுசெய்து கொள்ளும் நடைமுறை ஒழுங்கமைவு செய்யப்படும்.சில மருத்துவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவுசெய்து கொள்வதாலும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாலும், துல்லியமான எண்ணிக்கை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி தொடக்க நாளிலேயே புத்தகம்!

0 Comments

தொடக்கக்கல்வி (வகுப்பு 1-8) - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 22.05.2012 க்குள் பள்ளியில் பெற்று 01.06.2012 அன்றே மாணவர்களுக்கு வழங்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு .


பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு.

0 Comments

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 6ம் தேதி வரை பெறப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 6 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலிப் பணியிட விபரங்கள் சேகரிப்பு.

0 Comments

தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளிஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்த கல்வியாண்டில் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனே வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காலிப்பணியிட விபரங்களை உடனடியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

திட்டமிட்டபடி ஜூன் 3-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி.

0 Comments

டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில்,எவ்வித மாற்றமும் கிடையாது" என,டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறுலட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும்.வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.முதுகலை தேர்வு:வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாளில், ரயில்வே தேர்வும் நடப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில், ஐ.டி.ஐ., - பி.எஸ்சி., பாலிடெக்னிக் போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கான தேர்வுதான் அன்று நடக்கிறது.அத்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே, முதுகலை ஆசிரியர் தேர்வு, 740 மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை குறித்தும், தவறான தகவல்களை யாராவது பரப்பினால், அதை தேர்வர்கள் நம்பக்கூடாது.தேர்வு, நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். தகுதி அடிப்படையில்தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த விஷயத்தில் தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 5,451 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்.விடைகள் வெளியீடு:தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விடைத்தாளுடன் சேர்த்து மற்றொரு விடைத்தாள் வெற்று நகல் வழங்கப்படுகிறது. விடைகளை குறிப்பிடும்போது, அது நகலிலும் பதிவாகும். தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிட்டதும், இனி விடைகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகள்:முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுகளை வெளிப்படையாக நடத்தும் வகையில் விடைகள், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் சுர்ஜித் கே. சௌத்ரி.
WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives