ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை10. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை10.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 1. ISRO - Indian Space Research Organization2. NASA - National Aeronauntics and Space Administration3. சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே4. இந்தியா அரசியலமைப்பு - உலகிலேயே மிகவும் பெரிதானது5. இந்தியா அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 19506. இந்தியாவின் குடியரசு நாள் - ஜனவரி 26, 19507. இந்தியா ஒரு - இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு8. இந்தியாவில் வாக்களிக்கும் வயது - 189. மக்கள் நலம் காப்பதில் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பது - வழிகாட்டும் நெறிமுறைகள்10. மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - 54511. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 25012. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 1213. மாநிலங்களவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது - 3014. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் - 6 ஆண்டுகள்15. மக்களவையில் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்16. மாநிலங்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 23817. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 195218. மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்19. மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 220. மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 54321. இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள அவைகள் - இரண்டு, மக்களவை, மாநிலங்களவை22. மாநிலங்களவையின் பதவிக் காலம் - நிரந்தரமானது23. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - 3224. மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்25. அமைச்சரவை சகாக்களுக்குத் துறையை ஒதுக்கீடு செய்பவர் - பிரதம அமைச்சர்26. பிரதம அமைச்சரை நியமிப்பவர்- குடியரசுத் தலைவர்27. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி28. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்29. இந்தியாவின் முதல் மக்களவை பெண் தலைவர் - மீரா குமார்30. அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர் - குடியரசுத் தலைவர்31. புது தில்லி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 7032. புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 199133. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் - உச்ச நீதிமன்றம்34. சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை - 835. இலட்சத் தீவுகளின் தலைநகரம்- கவரத்தி36. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரம் - சில்வாசா37. அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரம் - போர்ட் பிளேயர்38. மத்திய அரசு நேரடியாக ஆட்சி செய்யும் பகுதிகள் - மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்39. முதலமைச்சரை நியமனம் செய்பவர் - மாநில ஆளுநர்40. தமிழ்நாட்டில் தற்போது உள்ளசட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 23441. மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்42. பாண்டிய நாடு உள்ளடக்கிய பகுதிகள் - மதுரை, இராமநாதபுரம்43. மதுரை யாருடைய தலைநகரம் - பாண்டியன்44. வெண்ணாறு கால்வாயை வெட்டியவர் - கரிகாலன்45. புலவர் பிசிராந்தையாரின் நண்பனாக விளங்கிய சோழ மன்னர் - கோப்பெருஞ்சோழர்46. வேளிர் என்பவர்கள் - மலை நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்47. கல்லணையை கட்டியவர் - கரிகாலன்48. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களை தோற்கடித்தவர் - கரிகாலன்49. பெருநராற்றுப்படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார்50. பட்டினப்பாலையின் ஆசிரியர் - உருத்திரங்கண்ணனார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி