தொடக்கக் கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 15 க்கு பிறகு நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2012

தொடக்கக் கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 15 க்கு பிறகு நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2012 - 2013ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தமிழக அரசு கடந்த மே 18 ல் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பொது மாறுதல் சார்பான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து முதற்கட்டமாக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் தலைமையில் 8 மாவட்டங்களில் தனது நேரடி பார்வையின் கீழ் நடந்த தொடக்கக் கல்வி துறையை சார்ந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில்2012 - 2013ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு ஆசிரியர்களுக்கான தேர்தோர் பட்டியல் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல்வழங்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. உபரி ஆசிரியர்கள் கண்டெடுத்து அவர்களை உரிய இடத்தில் பணிநிரவல் செய்த பிறகு தான் பொது மாறுதல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது புதுகோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 ஆம் தேதியும் அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 15 ஆம் தேதியும், தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை உள்ளதாலும் அதன்பிறகு தான் பொது மாறுதல் நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி