எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 198.50. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2012

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு கட்-ஆஃப் 198.50.

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேர கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உள்பட மொத்தம் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,695 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர ஒவ்வொரு ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199-ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 197.75-ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கடினமாக அமைந்து ஏராளமான மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்ததால், எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் 0.25 அளவுக்குக் குறைந்துள்ளது. செங்கல்பட்டு காரணமாக....1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 50-லிருந்து, நடப்புக் கல்வி ஆண்டில் (2012-13) 100-ஆக அதிகரித்து மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையும் 1,653-லிருந்து 1,695-ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 1,695 எம்.பி.பி.எஸ். இடங்களில், முற்பட்ட வகுப்பினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் (பொதுப் பிரிவினர்) மொத்தம் 526 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். எம்.பி.பி.எஸ். படிப்புக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ மொத்தம் 16 பேர் எடுத்துள்ளனர்;200-க்கு 199.75-ஐ 57 மாணவர்கள் எடுத்துள்ளனர்; இப்படி கட்-ஆஃப் மதிப்பெண் குறைய குறைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுப் பிரிவினருக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் விரைவில்எட்டப்பட்டு விடுகிறது. அதாவது,கட்-ஆஃப் மதிப்பெண் 199-க்கும் 198.50-க்கும் இடையில் 290-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்று பொதுப் பிரிவினருக்கு உரிய 526 எம்.பி.பி.எஸ். இடங்கள் பூர்த்தியாகி விடும் சூழ்நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.... எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில்சராசரியாக 40 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 முதல் 197-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் ஆகியோருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களும் கடந்தஆண்டைக் காட்டிலும் 1 முதல் 2 மதிப்பெண் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு கட்-ஆஃப் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆண்டு (2011-12) முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: பொதுப் பிரிவு (ஓ.சி.)-199; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.)-197.75; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் (பி.சி.எம்.)-196.50; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)-196.25; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-192. 25; தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினர் (எஸ்சிஏ)- 188. 25; பழங்குடி வகுப்பினர் (எஸ்டி)-189.25. உங்களுடைய கட்-ஆஃப் என்ன?சென்னை, மே 23: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரியஇயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 200-க்கு 198.50 வரை எடுத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் - மொத்த மாணவர்கள் 200-க்கு 200 -16 200-க்கு 199.75 -57 200-க்கு 199.5 -88 200-க்கு 199.25 -99 200-க்கு 199 -102 200-க்கு 198.75 -146 200-க்கு 198.50 -140

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி