பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் லேப்-டா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2012

பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் லேப்-டா

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் அக்டோபருக்குள் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்டமாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை 62 ஆயிரம் லேப்-டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் மூலமாகவே இந்த லேப்-டாப் விநியோகம் நடைபெற்றுவருகிறது.பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் லேப்-டாப் வழங்கப்பட்டதற்கான முத்திரை இடப்படும் எனத் தெரிகிறது. லேப்-டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு அதற்கான முத்திரையும் மதிப்பெண் சான்றிதழிலேயே இடப்படும் எனத் தெரிகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள், இந்த முத்திரையைக் காண்பித்து லேப்-டாப்புகள் தயாரான பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவசலேப்-டாப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.லேப்-டாப்புகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக லெனோவா, எச்.சி.எல்., ஏசர், எச்.பி., விப்ரோ, ஆர்.பி. இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரலுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தாய்லாந்து நாட்டில் மழை, வெள்ளத்தால் ஹார்டு டிஸ்க்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டதால் லேப்-டாப் விநியோகம் தாமதமாகத் தொடங்கியது.அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றில் இறுதியாண்டு படிக்கும் சுமார் 1.7 லட்சம் மாணவர்களுக்கு கடந்த 2 மாதத்தில் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டது. இதற்கடுத்ததாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5.3 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.சென்னையில் 27,500 லேப்-டாப்கள்: சென்னை மாவட்டத்தில் 27,500 மாணவர்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேப்-டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை மொத்தமாக 62 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபருக்குள் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்பட்டு விடும்என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அதன்பிறகு, கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பொறியியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மொத்தமாக இதுவரை 2.3 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 6.7லட்சம் லேப்-டாப்புகள் மாணவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி