அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2012

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள, 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 2012-13ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை இன்று (21ம் தேதி) துவங்குகிறது.சென்னையில், தரமணி மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.10ம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள்,150 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசு மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், தலா 25 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பங்கள்இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு அவர்கள், சான்றளிக்கப்பட்ட தங்களின் ஜாதி சான்றிதழின் நகலை கொடுக்க வேண்டும்.விண்ணப்பத்தை,www.tndte.comஎன்ற இணையதளத்திலும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி