தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்பிக்க... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2012

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்பிக்க...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட், படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 4 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பி.எட், படிப்பில் 1000 இடங்களுக்கு (500 தமிழ்வழி, 500 ஆங்கிலவழி) ஜூலை 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ்க்கண்ட11 ஒருங்கிணைப்பு மையங்களில் பி.எட், விண்ணப்பம் கிடைக்கும். அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி- சென்னை, எஸ்.என்.ஆர் கல்லூரி- கோவை, எஸ்.டி.ஹிந்து கல்லூரி- நாகர்கோவில், மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம்- மதுரை, சேதுபதி அரசு கலைக் கல்லூரி-இராமநாதபுரம், சோனா தொழில் நுட்ப கல்லூரி- சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போசு கல்லூரி-திருவாரூர், புனித ஜான் கல்லூரி- பாளையங்கோட்டை, தேசியக் கல்லூரி- திருச்சி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி-வேலூர் மற்றும் அறிஞர்அண்ணா அரசு கலைக் கல்லூரி- விழுப்புரம்.மேலும் கீழ்கண்ட பி.எட்., கல்வி மையங்களிலும் பி.எட்., விண்ணப்பம் கிடைக்கும்.ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி-சென்னை, புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி- சென்னை, டாக்டர் என்.ஜி.பி கல்வியியல் கல்லூரி-கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி-திருநெல்வேலி, உமா மகேசுவரனார் கல்வியியல் கல்லூரி-தஞ்சாவூர்,கிரசன்ட் கல்வியியல் கல்லூரி-திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி-மசக்காளிபட்டி, ராசிபுரம், வெள்ளாளர் கல்வியியல் கல்லூரி-ஈரோடு, மற்றும் ராசி கல்வியியல்கல்லூரி ராசிபுரம் டவுன். பி.எட், விண்ணப்பங்களை நேரில் ரூ,500 பணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் பெற ரூ,550/-வரைவு காசோலையை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை-15 என்ற பெயரில் எடுத்து பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577.அண்ணா சாலை, சென்னை-600 015 எனற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்கண்ட முக்கிய 8 நகரங்களில் நடைபெறும்: சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர்மற்றும் விழுப்புரம். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் நடைபெறும். பின்னர் பி.எட் வகுப்புகள் 2013 ஜனவரியில் துவங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24306658 மற்றும் 044-24306600 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி