பதவி உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் மீது தமிழக அரசின் தெளிவுரை கேட்டு கடிதம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2012

பதவி உயர்வு குறித்த நீதிமன்ற தீர்ப்புகள் மீது தமிழக அரசின் தெளிவுரை கேட்டு கடிதம்?

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த கல்வியாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவை அடுத்த சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தற்போது 38 உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசிடம் தெளிவுரை கேட்டு இருப்பதாகவும் அரசின் தெளிவுரை பெறப்பட்ட உடன், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொடக்கக் கல்வி துறையை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் சென்னையில் சமீபத்தில் நடந்த தொடக்கக் கல்வி இயக்குநர் ஆய்வு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட வழக்குகள் பொறுத்தவரை" PASS ORDER ON MERITS "என்று இருக்கும் நிலையில் அரசாணையின் படி ஆணை வழங்க வேண்டும் என்றும், அரசாணையின் படி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நிலையிருப்பின், முறையாக முறையீடு செய்தல் வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டதாக கல்வித்துறையை சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி