Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் : தமிழக அரசு அறிவிப்பு

0 Comments

சென்னை, ஜூன் 30 : தமிழக அரசு ஊழியர்களின் நலனை பேணும் வகையில், தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,"1.4.2012 முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகிலஇந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்கு ஆண்டுகளுக்கு,அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சமருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 5ல் கலந்தாய்வு. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! ( D.T.Ed Rank List)Diploma in Elementary Education (D.El.Ed):

0 Comments

34 AEEO & 14 Law College Lecturer Tentative Selected List

0 Comments

முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு

0 Comments

முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில்,"ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்துவருகின்றனர். இதனால்,"ஆப்சென்ட்" ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டில் முப்பருவக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, கற்றலின் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கு,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த வாரம் (ஜூலை 23) சனிக்கிழமை குறுவள மையம் அளவில், 6, 7, 8ம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில், மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர்"ஆப்சென்ட்" ஆகினர். இதனால், அதிர்ச்சியுற்ற எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள்,"ஆப்சென்ட்" தகவலை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், முப்பருவக் கல்வி முறையை, மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் கற்பிக்க முடியும்? "ஆப்சென்ட்" ஆனவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் முகமது அஸ்லம், முப்பருவக் கல்வி முறையில், கற்றலில் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்பு, மாநில அளவில் நடக்கின்றன. இதில், ஆசிரியர்கள் பலர்,"ஆப்சென்ட்" ஆகியுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மற்றும்"ஆப்சென்ட்" ஆசிரியர்கள் விவரங்கள் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

0 Comments

பணிநிரவல் கவுன்சிலிங்1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி,சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள்,செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்இடமாறுதல் கவுன்சிலிங்3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதேமாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்துபாட பட்டதாரி ஆசிரியர்களும்)5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்பதவி உயர்வு கவுன்சிலிங்6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் பாட பட்டதாரிஆசிரியர்கள்

ஆசிரியர்கள் நாகரிகமான உடைகளையே அணிய வேண்டும்-பள்ளி கல்வி இயக்குனர் அறிவுரை

0 Comments

9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான 2012-13 கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின்புதிய பாடத்திட்டம் ( Std 9 & 10 New Syllabus)

0 Comments

1 முதல் 8 வகுப்பிற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான SCERT-ன் 2012-13 வகுப்புவாரியான பாடவாரியான பாட செயல் திட்டம் (CCE STD 1 to 8 Subject & Class wise Manual)

0 Comments

எளிய செயல் வழிக்கற்றல் (Simplified Activity Based Learning- SABL) 1 முதல் 4 வகுப்பிற்கான 2012 - 13 அட்டைகள், குழு அட்டைகள், ஏணிகள் மற்றும் விளக்கங்கள் (SABL Materials 2012-13)

0 Comments

7979 பட்டதாரி ஆசிரியர் , 32 முதுகலை ஆசிரியர் மற்றும் 6239 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டுபணிக்காலம் நீட்டித்து அரசாணை 197, 199 & 200 வெளியீடு

0 Comments

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் (CPS) பிடித்தம் தொடர்பான விளக்கக் கடிதம் அரசு வெளியீடு

0 Comments

இரட்டை பட்டம் எனும் ( Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வில் பதவியுயர்வு வழங்க உயர்நீதி மன்றம் இடைக்கால தடை - அதை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

0 Comments

28.06.12 மற்றும் 29.06.12 அன்று நடைபெற உள்ள அரசு / நகராட்சி உயர் நிலை பள்ளிதலைமை பதவி உயர்வு மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பனி மாறுதல் கலந்தாய்வு-இல் கலந்து கொள்ள வேண்டிய தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது

0 Comments

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

0 Comments

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமாஉள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.முதன் முறையாக இதை முறைப்படுத்தி, படிப்பிற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசுநேற்று அறிவித்தது. சுயநிதி தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று மாலை அறிவித்தார்.அவர் கூறியதாவது: சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகளுக்கு, 2012-13ம் கல்வியாண்டிற்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளிடம் இருந்து, வரவு மற்றும் செலவு விவரங்களை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்கப்பட்டது.இதில், 788 கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கல்லூரிகளிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டன. இந்த ஆவணங்களை, குழு ஆய்வு செய்தது. ஆவணங்களை அனுப்பாத கல்லூரிகள் மற்றும் தணிக்கையாளரின் ஆய்வறிக்கைகள் அனுப்பப்படாத கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்ய, கல்வி கட்டண நிர்ணயக்குழு, 121 ஆய்வுக் குழுக்களை அமைத்தது.இக்குழுக்கள், சம்பந்தபட்ட கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகளை குழுவிடம் சமர்பித்தது. மேலும், பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.இதன் அடிப்படையில், கட்டண நிர்ணயக்குழு, பல்வேறு கால கட்டங்களில் கூடி, கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசித்து, தற்போது புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளுக்கு, சீரான கல்விக் கட்டணம் இதற்கு முன் இல்லை. தற்போது தான், முதல் முறையாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், 2012- 13, 2013- 14, 2014- 15 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கு பொருந்தும்.குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பல்கலையிடமோ, அரசிடமோ, குழுவிடமோ பெற்றோர் அல்லது மாணவர் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட கல்லூரி மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் வீரமணி, "அதிகக் கட்டணம் வசூல், உள்கட்டமைப்பு வசதியின்மை, விதிமுறைகளை கடைபிடிக்காதது, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நான்கு கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைபெறாது" என்றார்.ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி; சேலம் மாவட்டம் பாரதியார் கல்வியியல் கல்லூரி; சென்னை மாவட்டம் மியாசி கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

0 Comments

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம். இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

0 Comments

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.மாணவர்கள் சேர்க்கையின்போதே பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதியை சரியாக பெற்று பதிவு செய்ய வேண்டும். மாற்றம் செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்து கூற வேண்டும். பிறப்பு, ஜாதி சான்றுகளை பெற்று, அதில் உள்ள தேதி, விபரங்களைசரி பார்த்து பின்னரே பதிவு செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியகளும் சரி பார்த்து கையெழுத்திட வேண்டும்.மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் செய்ய முடியாது என்பதை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோர்ட் உத்தரவிட்டாலும் கூட, இயக்குனர் அனுமதி இல்லாமல் திருத்தம் செய்ய கூடாது. ஜாதி, பெயர், பிறந்த தேதி குறித்து அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். பலர் கோர்ட்டுகளுக்கு செல்கின்றனர். ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.பள்ளி கல்வி செயலரையும் வழக்கில் சேர்த்து சம்மன் பெற்றால், அவரது பெயரை நீக்க அரசு வக்கீல்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் முன் வர வேண்டும். மதிப்பெண் சான்றுகளை திருத்தம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் பரிந்துரைபடி, அரசு தேர்வுத்துறை இயக்குனர் தான் திருத்தம் செய்ய முடியும். 2012- 13ம் ஆண்டில் இது போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்து கொள்ள, அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

10+2+3 மற்றும் 11+1+3 பட்டதாரி பதவி உயர்வுக்கு தகுதி உண்டு ஆனால் பட்டம் படித்தப்பின் பன்னிரெண்டாம் (+2) வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு இல்லை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

0 Comments

2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

0 Comments

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012அரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு+2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆதி திராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொக

0 Comments

பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.ஏழ்மையினால், படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நடப்பு ஆண்டுமுதல் கிராமப்புற ஆதிதிராவிட மாணவிகள் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டத்தை வரவேற்ற, பழைய மாணவர் சங்கத்தினர்,தொகை உயர்த்தி வழங்கினால், மேலும் பயனுள்ளதாக இருக்கும் என அரசைவலியுறுத்தி உள்ளனர்.

தொடக்கக் கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு - மேற்பார்வை செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவு

0 Comments

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்துமாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 -Venue wise Individual Query for the Candidate

0 Comments

மருத்துவ படிப்பு : ரேங்க் பட்டியல் வெளியீடு

0 Comments

உங்களுக்கு SMS வரவில்லையா? - உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....

0 Comments

நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனேACTVஎன்று type செய்து என்ற98 70 80 70 70 எண்ணிற்கு SMS செய்யுங்கள்.        இந்தSMSஐ அனுப்பியும் உங்களுக்கு நம்SMSவரவில்லை என்றால் தங்களுக்கான சேவை GOOGLE SMS சேவை தளம் De- Activate செய்யப்பட்டு இருக்கிறது என்று பொருள். கவலை வேண்டாம் , மீண்டும் தாங்கள் செய்ய வேண்டியது:ON kalvisaithi என்று type செய்து98 70 80 70 70என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள். பிறகு, வழக்கம் போல் தங்களுக்கு நம் SMS வரத்தொடங்கும்.மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒருAlternate SMS சேவையை  Activate செய்யுங்கள் JOIN kalvisaithi என்று type செய்து0 92 195 92 195என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.இனி  NEW MEMBERS அனைவரையும்இரண்டு SMS Service யும் Activate செய்ய வழி காட்டுங்கள் kalvisaithi ஐtype செய்யும் பொது இடம் விடாமல்சேர்த்தே type செய்ய வேண்டும் ( No Space Between kalvisaithi)
1.ON kalvisaithi என்று type செய்து98 70 80 70 70என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.
2.JOIN kalvisaithi என்று type செய்து0 92 195 92 195என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.
( நம் kalvisaithi ஐ பின்தொடரும் நண்பர்கள் அனைவரும் இந்த தொழில் நுட்ப ஆலோசனையை பின்பற்றி தங்கள் மூலம் தகவல் பெறுபவர்களுக்கு அனைவருக்கும் இத்தகவலை அளித்து தொடர்ந்து தங்கள் கடமையாற்ற அன்பு வேண்டுகோளை www.kalvisaithi.blogspot.comவைக்கிறது.)

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2012 - 13 பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதி மற்றும் கலந்தாய்வு நடத்தும் மையங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு

0 Comments

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

0 Comments

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.

0 Comments

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்

0 Comments

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று (25.06.2012) சென்னையில் நடைபெறுகிறது

0 Comments

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று (25.06.2012) நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அரசின் மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் விநியோகம், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கானபணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு பிடித்தம்செய்யப்படும் ரூபாய். 25 மட்டுமே இம்மாதமும் பிடித்தம் செய்யப்படும். ஜூலை 2012 முதலே ரூபாய். 75 பிடித்தம் செய்யாப்படும் - அரசாணை வெளியீடு

0 Comments

TNPSC Tentative Answer keyspublished (Date of Exam:23.06.2012)

0 Comments

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்

0 Comments

திரு.தாஸ் அவர்கள், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கெனதனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது.அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர்.பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக்கணக்கை, அவர்களால் சரிபார்க்கமுடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கைகண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள்நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும்சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவுக்குப் பதிலளிக்கும்படிஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

0 Comments

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவதால், பி.எட். படிப்பில் மாணவ-மாணவிகள் போட்டிப் போட்டு சேருகிறார்கள். தற்போது போட்டித்தேர்வு முறை வந்துவிட்டதால் பி.எட். படிப்புக்கு மவுசு மேலும் கூடிவிட்டது.அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த பி.எட். இடங்களே இருப்பதால், பட்டப் படிப்பில்மிக அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் கிடைக்கிறது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் பி.எட். படிப்பதற்கு தனியார் சுயநிதி கல்லூரிகளைத்தான் நாடுகிறார்கள்.தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி தனியார் சுயநிதிகல்வியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் கோரிக்கைகளையும், கேட்டறிந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் பி.எட். கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கஅரசு முடிவு செய்துள்ளது.கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு கல்விக்கட்டணம்? என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் 113 பேருக்கு பணியிட மாறுதல்

0 Comments

தமிழகத்தில், 113 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பணியிட மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நேற்று நடந்தது. பணியிட மாறுதல் கேட்டு, 227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 113 பேர், விரும்பியஇடங்களை தேர்வு செய்தனர்.இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும், பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை, இயக்குனர் ராமேஸ்வர முருகன் வழங்கினார். துறையில், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம், 34 பேர் நேரடியாக உதவி தொடக்கக் கல்விஅலுவலர்களாக, தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு,விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. மீதியுள்ள இடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்ட அறிவுரைகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை

0 Comments

மேல்முறையீட்டுக்கு பின்- திருத்திய அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் 2012-13 வெளியீடு

0 Comments

இக்னோவில் எம்.எட்., படிப்பில் சேர வாய்ப்பு

0 Comments

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது.இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.எட்., படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அங்கீகாரம் பெற்ற அரசு பள்ளிகளில் இரண்டான்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.550 வரைவோலையாக எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஜூலை 15 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களை பெற www.ignou.ac.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.

பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (07.07.2012) விடுமுறை அளித்து உத்தரவு

0 Comments

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சதுரங்க விளையாட்டினை நடைமுறைபடுத்துதல் - மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு

0 Comments

வீட்டு கடன் மற்றும் முன்பணம் மாநில அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 15லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 25லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமும் உயர்த்தி அரசாணை வெளியீடு

0 Comments

டி.ஆர்.பி தேர்வு: ஜூலை 12 பள்ளிகளுக்கு விடுமுறை

0 Comments

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 12ம் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப்படும் நாளில், பள்ளி செயல்படுவதால் மாணவர்களுக்குஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக ஜூலை 12ம் தேதிக்கு இத்தேர்வு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இத்தேர்வை தமிழகம் முழுதும் 6லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.இதற்காக 1400 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக இருப்பதால் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.

தொடக்கக்கல்வி - தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014வரை பணிநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

0 Comments

தொடக்கக் கல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் -01.06.88 க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மொத்த பணிக்காலத்தையும் கணக்கீட்டு 01.06.88 அன்றுநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலைஅனுமதித்து தமிழக அரசு உத்தரவு

0 Comments

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதி நேரப் பயிற்றுநர்கள் - பணிநிமித்தம் தொடர்பான அறிவுரைகள் வழங்கி நடைமுறைப்படுத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

0 Comments

உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....

0 Comments

நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது . குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே ACTVஎன்று type செய்து என்ற 98 70 80 70 70  எண்ணிற்கு SMS செய்யுங்கள்.மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒருAlternate SMS சேவையை  Activate செய்யுங்கள்JOIN kalvisaithi என்று type செய்து 0 92 195 92 195 என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.இனி  NEW MEMBERS அனைவரையும்இரண்டு SMS Service யும் Activate செய்ய வழி காட்டுங்கள் kalvisaithi ஐtype செய்யும் பொது இடம் விடாமல்சேர்த்தே type செய்ய வேண்டும் ( No Space Between kalvisaithi)
1.ON kalvisaithiஎன்று type செய்து98 70 80 70 70என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.
2.JOIN kalvisaithiஎன்று type செய்து0 92 195 92 195என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு உரிய பாடங்கள் (Concern Major Subjects) அல்லாமல் வெவ்வேறு (Other Major subject) பாடங்களை படித்திருந்தாலும் அவை ஒத்த பாடமாக இருந்தால் அவற்றை சமமாக கருத - அரசாணை மற்றும் பட்டியல் வெளியீடு - அதன் மீது உரியநடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

0 Comments

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைசட்டம் 2009- பள்ளிகல்வித் துறையின் ஆசிரியர்களுக்கான முழு கையேடு

0 Comments

எந்ததெந்த ஆசிரியர்கள்எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

0 Comments

சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம்தேர்வு செய்யப்படுவர்.* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை -34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை -1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428உயர்கல்வித் துறை* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318சட்டத்துறை* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் THE UNITED INDIA INSURANCE CO LTD தேர்ந்தெடுத்து 01.07.2012 முதல் செயல்படுத்த தமிழக அரசு ஆணை

0 Comments

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்சி - ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திட உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / SSA / 2011 , நாள்.21.06.2012வட்டார மற்றும் குறுவள மைய பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு வரும் குறுவள மையத்தில் மற்றும் வட்டார வள மையத்தில் அளித்திடல் வேண்டும் என மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

சமூக விரோத கும்பலிடம் சிக்க வேண்டாம்: டி.ஆர்.பி. எச்சரிக்கை

0 Comments

அனைத்து தேர்வுகளும், முறையாக, நேர்மையாக, ஒவ்வொரு நிலையிலும் கவனமுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் கிடையாது. சமூக விரோத கும்பலின்பேச்சுக்களை நம்பி, தேர்வர் ஏமாறக் கூடாது. சமூக விரோத கும்பல் அணுகினால், உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிக்கை: "தமிழக முதல்வர், எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில், 42 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டார். இதற்கான தேர்வுகள், வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சரியான முறையிலும் நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வி அமைச்சரும், டி.ஆர்.பி., தேர்வுகள் அனைத்தையும் வெளிப்படையாக, முறையான அடிப்படையில் நடத்த வேண்டும் என, தெளிவாக கூறியுள்ளார்.எனினும், டி.ஆர்.பி., தேர்வுகள் குறித்து, வெளியில் சிலர், தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இத்தகவல், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு வந்துள்ளன. இதனால், தேர்வு நடைமுறைகள் குறித்து, தேர்வர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது, டி.ஆர்.பி.,யின் முக்கிய கடமை. டி.ஆர்.பி.,யில் நடைபெறும் அனைத்துப் பணிகளும், முற்றிலும் கணினிமயமானது.விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், அது உடனடியாக, "ஸ்கேன்&' செய்யப்படுகிறது. விண்ணப்பத்தில், பணியாளர்களின் தலையீடு எதையும் அனுமதிப்பதில்லை. பதிவெண் ஒதுக்கீடு, தேர்வு மையம், தேர்வு அறை, இருக்கை விவரம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுமே, கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. "ஹால் டிக்கெட்&'டுகள், தபால் மூலம், சம்பந்தப்பட்ட தேர்வருக்கு அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்தில் இருந்து, விடைத்தாள் நகலை, தேர்வர் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.தேர்வு மையங்களில் இருந்து, விடைத் தாள்களை பெற்று உடனடியாக,"ஸ்கேன்&' செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதன்பின், இட ஒதுக்கீடு அடிப்படையில், மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இவை அனைத்துமே, கணினிமயமாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நடக்கின்றன.இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, தேர்வர்களின் நலன் கருதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், "கீ-ஆன்சர்&' வெளியிடுவது என, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதன்மூலம்,தேர்வர், தங்களது மதிப்பெண்களை சுயமாகவும், தெளிவாகவும் மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.எனவே, தேர்வர்கள், டி.ஆர்.பி., செயல்பாடுகளில் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக விரோத கும்பல் மற்றும் சம்பந்தமில்லாத நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். பணம் கொடுத்தால் வேலைஎன்று கூறும் சமூக விரோத கும்பலிடம், தேர்வர் சிக்கி ஏமாறக் கூடாது. அப்படிப்பட்ட நபர்களைப் பற்றி தகவல் கூறினால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது.

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட BT& PG ASST பதிவுமூப்புதாரர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு.

0 Comments

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.அதேபோல், 2010-11ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள 120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.இரு தேர்வு முடிவுகள் இன்று(ஜுன் 20) வெளியீடு:அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

TRB - PG selection List & Answer Keys for Eng College Professor, Polytechnic Lecturer & PGs

0 Comments

I முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு (CCE) முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் ( 1st Semester Syllabus JUNE to September )

0 Comments

CCE - Teachers & Students Forms for Class Room Activity

0 Comments

குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைசட்டம் 2009 ஐ சார்ந்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த கலை குழுக்கள் மூலம் கலை நிகழ்சிகள் மற்றும் வாசகங்கள் தாங்கிய பேரணி வாயிலாகவும் செயல்படுத்ததிட்டமிடல் கூட்டம் இயக்குனரகத்தில் 21.06.2012 அன்று நடைபெறுகிறது

0 Comments

CCE FORUMS.

0 Comments

CCE STUDENT CUMULATIVE RECORD

CLICK HERE TO DOWNLOAD

CCE TEACHER RECORD

CLICK HERE TO DOWNLOAD

CCE I CAN DID RECORD

CLICK HERE TO DOWNLOAD

Recruitment of Graduate Assistants (Backlog Vacancies) through Employment Registration State Seniority for 2010 - 11 -List of Candidates Called for Certificate Verification

0 Comments

Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011 RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION

Click here and Know your status.....

விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு

0 Comments

பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.கடந்த,2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி.,வட்டாரம் நேற்று தெரிவித்தது.சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.அதேபோல்,2010-11ம் ஆண்டிற்கானமுதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.இரு தேர்வு முடிவுகள் இன்று(ஜுன் 20) வெளியீடு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு

0 Comments

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

click here and download the GO 96- dated 18.06.2012

CRC confirmation message

0 Comments

உயர் தொடக்க நிலை குருவள மையங்கள் :- 23.06.2012

தொடக்க நிலை குருளவமையங்கள்:- 30.06.2012

இந்த தேதிகளில் தான் அணைத்து குருவளமையங்களும் நடைபெறும் இது உறுதி படுத்தபட்ட தகவல். இந்த தேதிகளில் குழப்பம் இருந்தது உண்மை தான் தற்போது இதற்கான உறுதிபடுத்தப் பட்ட தகவல் கிடைக்கப் பெற்றமையால் இந்த தகவலை வெளியிடுகிறோம் இது வரை பொறுமை காத்த தோழர்களுக்கு நன்றி.........

மேலும் உறுதி செய்ய இங்கே சொடுக்கவும்

கிராம கல்விக் குழுக்களை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு - தொடக்கக் கல்வி இயக்குனர் கடிதம்

0 Comments

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் 5 பள்ளிகளை மூன்று நாட்கள் ( ஜூன் 19, 20 & 21 ) பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

0 Comments

பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகவியல் பாடங்கள் அல்லாமல் வெவ்வேறு (Major subject) பாடங்களை படித்திருந்தாலும் அவை ஒத்த பாடமாக இருந்தால் அவற்றை சமமாக கருத - அரசாணை மற்றும் பட்டியல் வெளியீடு

0 Comments

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

0 Comments

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் ந.க.எண். 796/ ஈ2 / 2012 , நாள். 15.06.2012தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.இம்முறையினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் வலுவூட்டதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெற்றிக் பள்ளி ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 2012 ஜூன் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடைமுறைப்படுத்தும் முறையினை உற்றுநோக்கி, இம்முறையினை செயல்படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு எழும் ஐயங்களையும், இடர்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை அறிக்கையாக தயார் செய்து அவ்வறிக்கையினை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் 22.06.2012 அன்று தனி நபர் மூலம் படிவங்களின் தொகுப்பினை முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களிடம் சமர்பிக்கவ்வும், சமர்ப்பித்தற்கான அறிக்கையினைஅனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை

0 Comments

AEEO counselling 2012-13

0 Comments

School Education - Equivalence Committee - considering the Educational qualification obtained from various Universities as equivalent to the qualification prescribed for the post of B.T. Teachers - Recommendation of the Equivalence Committee - Orders - Issued

0 Comments

1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்.

0 Comments

ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான,"ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.அரசு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, டி.ஆர்.பி., (தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்) செய்து வருகிறது. கடந்த காலங்களில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு நடந்து வந்த நிலை மாறி, ஓராண்டாக, தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.பொதுவாக, 100, 200 மையங்களில் தான் தேர்வுகள் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கு, 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், அதிகபட்சமாக, 1,040 மையங்களில் தேர்வு நடக்க இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், 400 முதல் 500 பேர் வரை தேர்வெழுதுவர்; ஒரு அறையில் 20 பேர் வரை எழுதுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியர்), 3 லட்சத்து, 4 ஆயிரத்து, 248 பேரும்; இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வை, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 836 பேர் என, மொத்தம், 6 லட்சத்து, 56 ஆயிரத்து, 84 பேர்எழுதுகின்றனர். ஹால் டிக்கெட் தேர்வர்களுக்கு, நேற்று முதல் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது.முதலில், தென் மாவட்டங்களுக்கும், கடைசியாக, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்படும். 22ம் தேதிக்குள், அனைவருக்கும், ஹால்டிக்கெட் அனுப்பப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஹால் டிக்கெட் பின்புறம், விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை குறிப்பிடாமல் இருந்தால், தேர்வு அறையில் தேர்வு செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும்.இரண்டாம் தாள் தேர்வில், விருப்பப் பாடத்தை மாற்றி எழுதியிருந்தால், விடைத்தாளில் சரியாக எழுத வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகள் நடத்தும் அனைத்து தேர்வுகளும், பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும். ஆனால், டி.இ.டி., தேர்வு, வியாழக்கிழமை நடக்கிறது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு தேர்வுகளை நடத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேறு வழியின்றி, வியாழக்கிழமை நடத்துகிறோம். ஆகஸ்டில் நடத்தினால், மேலும் கால தாமதம் ஏற்படும்&' என்றனர்.டி.இ.டி., தேர்வுக்கு,"கீ-ஆன்சர்&' வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. விடைகளில் வரும் ஆட்சேபங்களைப் பார்த்த பின், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடவும் டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

CRC பயிற்சி: வீட்டிற்கு அருகில் உள்ள மையங்களில் பங்கேற்க விருப்ப விண்ணப்பம் last dt:22.06.12

0 Comments

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்

0 Comments

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2012-13ஆம் கல்வியாண்டில்புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

0 Comments

Revised Higher secondary Name List after Appeal as on 01.01.2012

0 Comments

தமிழகத்தில் முப்பருவ புத்தகமா அல்லது செயல்வழிக் கற்றல் அட்டையா?

0 Comments

பள்ளிகள் திறந்து 15 நாள்கள் ஆகியும் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் முப்பருவப் புத்தகமா, செயல்வழிக் கற்றல் அட்டையா, எந்த வழியில் பாடம் நடத்துவது என்று குழப்பத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் ஏ.பி.எல். எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை இம்முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.இம்முறையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் இருந்தாலும் கற்றல் அட்டை வாயிலான படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இம்முறையில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு கற்றல் அட்டைகளைப் படிப்பதன் மூலம் படிநிலை அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் விதமாக அரசு முப்பருவ முறையில் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முப்பருவ முறை பாடப் புத்தகங்களின் அடிப்படையில் பாடம் நடத்தத் தொடங்கி விட்டனர்.ஆனால் அரசுப் பள்ளிகளில் ஏ.பி.எல். முறைப்படி மாணவர்களைப் பிரித்து கற்றல் அட்டைகளை வைத்து பாடம் நடத்துவதா, வகுப்பு வாரியாகப் பிரித்து முப்பருவ முறை புத்தகங்களை வைத்து பாடம் நடத்துவதா எனக் குழப்பத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, இன்னும் 15 நாட்களில் கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். கற்பித்தலைப் பொறுத்தவரை செயல்வழிக் கற்றல் முறையே தொடரும் என்றனர்.

சமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

0 Comments

சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசுமற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.இதுதொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகர் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டினர்.சமச்சீர் கல்வி முறை அமலால் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒரேமுறையான பாடதிட்டம் என்பதால், பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்துள்ளனர். இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

Plus Two Re-Valuation & Re-Totalling of Answer Scripts - Online Application

0 Comments

Special Transfer for High School HMs who are in 100 Upgraded HSS

0 Comments

பள்ளிக்கல்வி - பதவிஉயர்வு- அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மதுரை ஐகோர்ட் கிளைஉத்தரவு.

0 Comments

மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்விஇயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசுபள்ளியில் 2001 டிசம்பர் 31க்குமுன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர்அலிவிசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மைகல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னைஉயர் நீதிமன்றம்

0 Comments

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுகளில் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், ஆகவே பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது எனவும், ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடக்கக்கல்வி - பள்ளி செல்லும் குழந்தைகளுக்கானசிறப்புத் திட்டங்கள் செயல்படுத்துதல் - 2012 - 13கல்வியாண்டில் பள்ளிகளை குழந்தைகள் நேசிக்கும் இடமாக மாற்றியமைத்தல் - சார்பு.

0 Comments

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 013116 / ஐ2 / 2012 , நாள். 29.05.2012

IGNOU -2013 B.Ed., Distance Education Admission.

0 Comments

Admission Open for BED(DISTANCE EDUCATION) Prospectus Click Here...
Application Cost : Rs.500/- at CounterRs.550/- by PostLast Date for Apply : 15.07.2012Entrance Exam : 19.08.2012Programme Fee : Rs.17400/-

ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள CRC மையங்களில் பங்கேற்க விருப்ப விண்ணப்பம் பெறப்பட இருக்கிறது

0 Comments

1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து அரசு , நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE ) முறையிலேயே பாடத்திட்டம்பின்பற்றப்பட வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

0 Comments

Bharathiar University - Distance B.Ed Selected Candidates List (2012-13 batch)

0 Comments

2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை

0 Comments

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல்- ஆணை வெளியிடப்பட்டுள்ளது.தரவிறக்க

ம் செய்ய ........

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES).

0 Comments

திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள். 13.06.2012அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது .

பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்

0 Comments

ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளைவழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே, விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள்,காலணிகள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை மாணவர்ளுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது, அந்தப் பட்டியலில் புதிதாக, லேப்டாப், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கலர் பென்சில், ஜியோமெட்ரி பாக்ஸ் மற்றும் அட்லஸ் ஆகியவைசேர்ந்துள்ளன. காலணிகளும் தற்போது புதிய டிசைன் மற்றும்வண்ணங்களில் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு பணியும் தனித்தனி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலணி மற்றும் கலர் பென்சில் வழங்கும் பொறுப்பு, தொடக்க கல்வி இயக்குனரகத்திடமும், அட்லஸ் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமும் வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகளும் நடைபெறுகின்றன.விலையில்லா காலணிகள் 1 முதல் 10ம் வகுப்பு வரையில் படிக்கும், மொத்தம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவர்களுக்கு, காலணிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு அரசுஒதுக்கியுள்ள தொகை ரூ.94 கோடியே 76 லட்சம்.விலையில்லா காலணிகளைப் பொறுத்தவரை, இந்தமுறை ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால்,ஒட்டுமொத்தமான ஒரு அளவில் தயாரித்து அனைவருக்கும் வழங்கி விடாமல், ஒவ்வொரு மாணவ,மாணவிக்கும் தனித்தனியே அளவெடுத்து, அதற்கேற்றபடி தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.லேசான பழுப்பு நிறம், அடர்த்தியான பழுப்பு நிறம் மற்றும் சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் காலணிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் கால் அளவுகள் எடுக்கப்பட்டு, மொத்தமாக, தொடக்கக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பப்படும். தமிழகம் முழுவதுமிருந்தும் வரும் அளவுகளை கணக்கிட்டு, அதற்கேற்ப காலணிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU) முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (M .Ed ) - ஜனவரி 2012 சேர்க்கை அறிவிப்பு

0 Comments

ஆகஸ்ட் 12ல் குரூப்-2 தேர்வு: 3,631 இடங்களை நிரப்ப அறிவிப்பு

0 Comments

குரூப்-2 நிலையில், ஏற்கனவே 7,000 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், 3,631 காலியிடங்களைநிரப்ப, மேலும் ஒரு குரூப்-2 தேர்வை, நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.இதற்கான முதற்கட்டத் தேர்வு, ஆகஸ்ட் 12ல் நடைபெற உள்ளது. பட்டதாரி தகுதி கொண்டவர்கள், ஜூலை 13ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, ஜூலை 17ம் தேதி கடைசி நாள்.மொத்த காலிப் பணியிடங்களில், சார்-பதிவாளர் பதவிக்கு 52 பணியிடங்கள், நகராட்சி கமிஷனர் பதவிக்கு 14 பணியிடங்கள், இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் 181, இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் 229 மற்றும் வருவாய்த் துறையில், உதவியாளர் பணியிடம் 380 ஆகியவை குறிப்பிடத்தக்கது.இதுதவிர, இந்து அறநிலையத்துறைஅலுவலர் உட்பட வேறு சில பதவிகளும், இத்தேர்வில் அடங்கி உள்ளன. ஏற்கனவே நிரந்தர பதிவு செய்தவர்கள், இத்தேர்வுக்காக தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களுக்கான எண்களைக் கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணத்தை மட்டும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் செலுத்தினால் போதும்.அதேபோல், குரூப்-4 தேர்வுக்காக விண்ணப்பித்த, 11 லட்சம் பேரின் பதிவுகளும், நிரந்தர பதிவிற்கு மாற்றப்படுவதால், அவர்களும் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என, தேர்வாணைய செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.முதல் நிலை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரு நிலைகளில், இத்தேர்வு நடக்கும். நேர்முகத் தேர்வுக்குப் பின்,அக்டோபரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஏற்கனவே, குரூப்-2 நிலையில், 7,000 பணியிடங்களை நிரப்ப, முதற்கட்ட தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட தேர்வு அறிவித்திருப்பது, வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CCE Power Point Projects...

0 Comments

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மின்சாரக் கட்டணம் கட்டாமல் - நிலுவை உள்ளது - கூடுதல் நிதி தேவை விவரம் கோருதல்.

0 Comments

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 9848 / சி 1 / 2012, நாள். 06.06.2012தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடிதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மின்சாரம் கட்டாமல் நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 16.06.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் மின்கட்டணம் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதால் அக்கூட்டத்தில் சம்பந்தப்பட்டபணியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநருக்கு சமர்ப்பிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

EMPLOYMENT EXCHANGE STATISTICS IN TN AS ON 31.12.2011

0 Comments

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - சிறப்பு ஆசிரியர்கள் - கல்வித் தகுதி ஆய்வு செய்யமாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

0 Comments

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 /மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ், நன்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு ஆசிரியர்கள் தெரிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 /மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012 பதிவிறக்கம் செய்ய...

2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு - அரசானை வெளியீடு

0 Comments

அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி கடன் :அ). ரூ. 50000/- வரை -5.50 %ஆ). ரூ. 50001/-  முதல் 150000/- வரை - 7.00 %இ). ரூ.150001/- முதல் 500000/- வரை - 9.00 %ஈ).  ரூ.500000/- த்திற்கு மேல் - 10.00%கூட்டுறவு வங்கிகளில் பெறும் கடன்களுக்கு - 10.00%

முழுமையாக அறிய அரசாணை 203 இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்

DSE High / HS School GeneralTransfer Date and Place Changed

0 Comments

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசுதிட்டம்

0 Comments

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின்"ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Click here and download the free student bus pass form

மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன்கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று,மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

பள்ளி வயது மற்றும் பள்ளிசெல்லா குழந்தைகளின் பதிவேட்டை - Elementary Education Register (EER) - புதுப்பிக்க இயக்குனர் அறிவுரை

0 Comments

2012-13 செயல் ஆராய்ச்சி (Action Research) , ஒரு வட்டாரத்திற்கு 10 வீதம் 401 வட்டாரத்திற்கு 4010 செயல் ஆராய்சிகள் செய்ய மாநில திட்ட இயக்குனர் அனுமதி

0 Comments

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

0 Comments

போட்டித் தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் 33 முதுநிலை விரிவுரையாளர் ஆகியோருக்கு, வரும் 18ம் தேதி டி.ஆர்.பி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 33 முதுநிலை விரிவுரையாளரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு,மார்ச் 4ம் தேதியும், தொடக்க கல்வித்துறையில் பணியாற்ற 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலரை தேர்வு செய்வதற்கான தேர்வு, பிப்ரவரி 26ம் தேதியும் நடந்தன. இதன் முடிவுகள், கடந்த6ம் தேதி வெளியானது.இரு தேர்வுகளிலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 18ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், ஏதாவது பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வரின் தேர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்படும்.கல்வித் தகுதி மற்றும் சான்றிதழ்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், இறுதி தேர்வர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு டி.ஆர்.பி. அனுப்பி வைக்கும். 67 பேருக்கும், இம்மாத இறுதிக்குள் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிகிறது.

அரசு கல்வி தொலைகாட்சி சேனலில் ஆசிரியர்களை கொண்டு 21.062012 முதல் 23.06.2012 வரை நிகழ்ச்சிகளை தயாரித்தல்- இயக்குனர் கடிதம்

0 Comments

TENTATIVE IN-SERVICE TEACHERS TRAINING SCHEDULE 2012 -2013.

0 Comments

அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ 5 / பயிற்சி / அகஇ / 2012 நாள்.06.06.2012
TENTATIVE IN-SERVICE TEACHER TRAINING SCHEDULE 2012 -2013 CLICK HERE...

தொடர் மற்றும் முழுமையான மதிப்பிட்டு (CCE) முறைக்கான தொடக்க மற்றும் நடுநிலைஅரசு / தனியார் பள்ளிகளுக்கான முழமையானதமிழ் மற்றும் ஆங்கில கையேடு

0 Comments

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு.

0 Comments

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

பேராசிரியர் ஆகவேண்டுமெனில் 15 பயிற்சி கட்டாயம்!

0 Comments

கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு சார்பில் நடத்தப்படும், 15 நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலைக்கழக மானியக்குழு கூட்டம், கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்றது. இதில், நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதவிர, உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தரமான கல்வி வழங்குவது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.உத்தரவு:இதுநாள் வரை, பி.எச்.டி., முடித்தவர்கள், நெட், ஸ்லெட், சி.ஐ.எஸ்.ஆர்., தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கல்லூரி ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இனி, இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றாலும், பல்கலைக்கழக மான்யக் குழு சார்பில் நடத்தப்படவுள்ள, 15 நாள் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.இந்தப் பயிற்சியில், மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுதல், பாடம் நடத்தும் முறை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். சென்னை பல்கலை, நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சியை துவங்க திட்டமிட்டு உள்ளது.நடப்பாண்டில் துவக்கம்:இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: டி.டி.எட்., - பி.எட்., முடித்தவர்கள் தான் பள்ளிகளில் ஆசியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, படிக்கும்போதே உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இந்த பயிற்சிகளை பெறுவதில்லை. இதனால், ஆசிரியர், மாணவர் உறவில் விரிசல் ஏற்படுகிறது.இதை களையும் நோக்கில், இதுபோன்ற பயிற்சிகளை நடத்த பல்கலைக்கழக மான்யக் குழு, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பயிற்சியின் மூலம், ஆசிரியர்களின் திறன் மேலும் மேம்படும். ஆசிரியர் கல்வி கல்லூரி ஆலோசனைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஆட்சி மன்றக்குழுவின் ஒப்புதலை பெற்று, சென்னை பல்கலைக் கழகம் நடப்புக் கல்வியாண்டில், இந்த பயிற்சியை துவங்க திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்புகள், விரைவில் வெளியாகும்.இவ்வாறு திருவாசகம் கூறினார்.

தள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம

0 Comments

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம்"தள்ளாடி" வருகிறது.இதனை கண்காணிக்க உயர் மட்ட குழுஅமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அகில இந்திய அளவில் அனைவருக்கும் இலவச கல்வி என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே குரல்கள் ஓங்கி ஒலித்தன. கல்வி பெறுவது மக்களின் உரிமை, கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற சமூக நீதியின் அடிப்படையில் இக்கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், சுப்ரீம் கோர்ட் தலையீடு போன்றவற்றினால் இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்கு பிறகு அனைவருக்கும் இலவச கல்வி என்பது, கட்டாய கல்வி என சட்டமாகியுள்ளது. இதன்படி கடந்த 2010ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது.கல்வி பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்று இச்சட்டம் கூறுகிறது. ஆனால் முழுமை பெறாத இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆட்சியாளர்களின் உறுதியற்ற நிலை, அதிகாரிகளின் மெத்தன போக்கு, கல்வியை லாப வேட்டடைக்காக மாற்ற துடிக்கும்தனியார் கல்வி நிறுவனங்கள் என இந்த தடை பட்டியல்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.அரசின் நிதி உதவி பெறாத சிறுபான்மை நிறுவனங்கள் நீங்கலாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்கள் பள்ளியில் மொத்த இடத்தில் 25 சதவீதம் அருகில் உள்ள ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளை சேர்க்க வேண்டும். இக்குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க உயர் மட்ட குழுவை அரசு நியமிக்க வேண்டும் என இச்சட்ட விதிகள் கூறுகின்றன.ஆனால் தமிழக அரசு இக்குழுவை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதாக பல்வேறு அமைப்புகள் குறை கூறுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் இதனை கண்டு கொள்ளாதது ஒருபுறமிருக்க, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் பல மடங்கு கட்டணம் வசூலித்து அரசுக்கு சவால் விடுத்து வருகின்றனர். அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் கட்டாய நன்கொடை என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் விரும்புகின்றனர்.நெல்லை மாவட்டம்நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு பள்ளிகள் 142, உதவி பெறும் பள்ளிகள் 86, பகுதி உதவி பெறும் பள்ளிகள் 62, மெட்ரிக் பள்ளிகள்106 உட்பட மொத்தம் 433 பள்ளிகள் உள்ளன. உயர்நிலைப் பள்ளிகள் 186, மேல்நிலைப் பள்ளிகள் 247ம் இதில் அடங்கும். மாவட்டத்தில் அரசிடம் நிதி உதவி பெறாத சிறுபான்மை நிறுவனங்கள் நீங்கலாக பிற பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.இதனை கண்காணிக்க உயர் மட்ட குழுவும் அமைக்கப்படாததால் பள்ளி நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் உள்ளன. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி கூறும் போது, "ஒரு கி.மீ சுற்றளவுக்குள் எந்தவித பள்ளியும் இல்லாத நிலையில் அந்த தனியார் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்னை இதுவரை எழவில்லை. எனினும், இதுதொடர்பாக உரிய ஆய்வுகள் செய்யப்படும்&'&' என்றார். news:Dinamalar

பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - ஆணைவெளியிடப்படுகிறது.

0 Comments

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்.

0 Comments

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து"ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது

0 Comments

சத்துணவு பணியாளர்களுக்கு பணியுயர்வு மற்றும் இளநிலை உதவியாளர் / கணினி ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் 21 முதல் 23 வரை

0 Comments

2012-13 பள்ளி மானியம் விடுவிப்பு மற்றும் அதற்கான செலவின வழிகாட்டுதல்கள்

0 Comments

SSLC TATKAL JUNE 13 TO 15

0 Comments

டி.இ.டி. தேர்வர்களுக்கு மொழிப்பாடம்: தேர்வு மையத்தில் தேர்ந்தெடுக்கலாம்

0 Comments

டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.ஜூலை 12ம் தேதி, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியருக்கானது); பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியருக்கானது) நடக்கிறது. தேர்வர்களுக்கு, 18ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், "ஹால் டிக்கெட்" அனுப்பி வைக்கப்படும் என துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விண்ணப்பித்த தேர்வர்களில் பலர், மொழிப்பாடம் எது என்பதை குறிப்பிடவில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிப் பாடங்கள் உள்ளன. இதில், எதையுமே குறிப்பிடாத தேர்வர்கள், தேர்வு அறைக்குச்சென்றதும், தங்களது மொழிப்பாடத்தை தேர்வு செய்து,அதைப் பற்றி, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கவேண்டும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் (விடைத்தாள்) உள்ள விவரங்களை தவறில்லாமல், சரியாகக் குறிப்பிட்டால் போதும்.இதற்கு வசதியாக, ஒரே கேள்வித்தாளில், ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்ட கேள்விகள் இருக்கும். இதில், தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிக்கு தகுந்தபடி, சம்பந்தப்பட்ட மொழி கேள்வித்தாளைப் பார்த்து, விடை அளிக்கலாம். 6.5 லட்சம் பேர், டி.இ.டி., தேர்வை எழுதுவர். ஆங்கில மொழிப் பாடங்களை தேர்வு செய்த தேர்வர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இருக்கும் என்று டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

0 Comments

சக குழந்தைகள், புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் தான் குழந்தை தொழிலாளர்கள். உலகில் குழந்தைதொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.உலகில் 21 கோடி பேர், குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில்11 கோடி பேர் பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016ம் ஆண்டுக்குள் இதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு"Hall Ticket" ஜூன் 15 க்கு பிறகு தபால் மூலம் அனுப்பஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

0 Comments

ஆசிரியர் தகுதித் தேர்வு "Hall Ticket" ஜூன் 15 க்கு பிறகு தபால் மூலம் அனுப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் , தபால் மூலம் "Hall Ticket" பெற முடியாதோர் இணையதளத்தின் மூலம் தங்கள் "Hall Ticket" ஐ டவுன்லோட் செய்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தப்பின் நம் இணையதளத்திலும் அவ்வசதி ஏற்படுத்தப்படும் .
WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives