அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று (25.06.2012) நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அரசின் மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் விநியோகம், மாணவர் சேர்க்கை விவரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கானபணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Jun 25, 2012
Home
kalviseithi
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று (25.06.2012) சென்னையில் நடைபெறுகிறது
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று (25.06.2012) சென்னையில் நடைபெறுகிறது
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி