தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2012

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி