எந்ததெந்த ஆசிரியர்கள்எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2012

எந்ததெந்த ஆசிரியர்கள்எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

சென்னை: பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகள் பற்றிய விபரங்களை அறிதல் அவசியம்.பள்ளிக் கல்வித்துறையின் விபரங்கள்* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,743 - இப்பணிக்கு தேர்வுப் பட்டியல் தயாராக உள்ளது. ஆனால் ஐகோர்ட் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.* இடைநிலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,451 - இவர்கள் டி.இ.டி தேர்வு மூலம் தெரிவுசெய்யப்படுவர்.* சிறப்பு ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,555 - தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 4,367 - இதுவரை 4,006 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டு விட்டது. மீதியுள்ள இடங்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.* பட்டதாரி ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 18,343 - டி.இ.டி தேர்வு மூலம்தேர்வு செய்யப்படுவர்.* வேளாண் ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 25 - தேர்வு முடிவை வெளியிட அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.* பி.ஆர்.டி - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 634 - டி.இ.டி தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவர்.* ஏ.இ.இ.ஓ - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை -34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.* முதுநிலை விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 34 - 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை -1,347 - ஒரு கட்ட தேர்வு முடிவு வெளியீடு. மீதமுள்ள இடங்களுக்கு 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.* முதுகலை ஆசிரியர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 2,895 - மே 27ம் தேதி தேர்வு நடந்தது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 36,428உயர்கல்வித் துறை* உதவிப் பேராசிரியர்(பொறியியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 154 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.* உதவிப் பேராசிரியர்(பாலிடெக்னிக்) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 139 - தேர்வு முடிவை வெளியிடும் பணி நடக்கிறது.* உதவி பேராசிரியர்(கலை அறிவியல் கல்லூரி) - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,025 - உயர்கல்வித் துறையிடம் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.இத்துறையிலுள்ள காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 1,318சட்டத்துறை* விரிவுரையாளர் - இப்பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 45 - தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த 3 துறைகளிலும் மொத்தமாக சேர்த்து காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 37,791.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி