மருத்துவ காப்பீடு"பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2012

மருத்துவ காப்பீடு"பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப் பட்டு உள்ளது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துஅலுவலர்களுக்கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது,"ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப் பட்டு இருந்தது.காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறும், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. இதன்மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.தற்போது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் செய்ய, பல்வேறு நிறுவனங்களில் மாநில அரசு டெண்டர் கோரியது.அதன் அடிப்படையில், "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்துக்கு, அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. காப்பீட்டுத் தொகை, இரண்டு முதல், நான்கு லட்சம் ரூபாய் என,உயர்த்தப் பட்டு உள் ளது.
கூடுதல் சிகிச்சை:
முந்தைய காப்பீட்டு நடைமுறைகளிலிருந்து, கூடுதலாக சிகிச்சை மற்றும் கூடுதலாக புதிய மருத்துவமனைகள், இந்தத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு உள்ளன. அந்த வகையில், 54 வகையான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையும்; ஏழு வகையான அறுவைசிகிச்சைகளும் மேற்கொள் ளலாம்.மாத பிரீமியம்: மாத பிரீமியம், 150 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது. ஜூலை 2012 முதல், ஜூன் 2016ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, பாலிசி அமலில் இருக்கும். இதற்காக, இந்த மாதம் முதல், அரசு ஊழியர் சம்பளத்தில், 150 ரூபாய் கட்டாயம் பிடித்தம் செய்யவும், அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவு, அரசு ஊழியர் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஆறு மடங்கு: அரசு ஊழியர்கள் கூறியதாவது: காப்பீட்டுத் தொகை,இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பிரீமியத் தொகை, 25ல் இருந்து, 50 அல்லது 75ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதை ஆறு மடங்கு உயர்த்தி உள்ளனர்.தற்போது பிடித்தம் செய்யும் 150 ரூபாயிலும், குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து கொண்டு தான், காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்த உள்ளது. புதிய மருத்துவமனை, கூடுதல் சிகிச்சை என்றெல்லாம் காரணம் தெரிவித்தாலும், அதிகபட்சமாக, 50 சதவீதம் பேர் கூட, பயன் பெறுவதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி