1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2012

1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டது.இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும்கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி