அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: "நபார்டு' வங்கி ரூ.129 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2012

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: "நபார்டு' வங்கி ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, "நபார்டு'வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதுதொடர்பாக, "நபார்டு' வங்கியின்,தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர். ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி