தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2012

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்படஉள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி