பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2012

பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய வழிமுறைதமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதில் கூறியுள்ளதாவது: திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள்விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும்.மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்க வேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி