ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2012

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் அறிமுகம்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதற்கு முன்பு உதவித் தொகைகேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித் தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்துகொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி