பிளஸ் 2 தனித்தேர்வு"தட்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு"தட்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

(www.dge.tn.nic.in)பிளஸ் 2 தனித்தேர்வர்கள் "தட்கல்' திட்டத்தின் கீழ் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  அக்டோபர் மாதம்நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) இணையதளத்தில்(www.dge.tn.nic.in) விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகியதேதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு விண்ணப்பிக்க முடியாது."தட்கல்' முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், ரூ. 1,000 கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.  பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அனுமதிச் சீட்டை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் அனுப்புவதற்கு ரூ. 30-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையைச் சமர்ப்பிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி