அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை : மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2012

அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை : மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் 22 கோடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.   இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களில் அரசு நடத்தும் 11 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 22 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் முழு உடல் பரிசோதனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக மண்டல அளவில் 2,414 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதற்காக ரூ.383 கோடி நிதியை மத்திய சுகாதார துறை அமைச்சர்குலாம்நபி ஆசாத் ஒதுக்கியுள்ளார். மாணவ, மாணவிகளின் கண் பார்வை, செவித் திறன், சருமம், இதயம், பற்கள் என உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்பது பரிசோதனையின் போது உறுதி செய்யப்படும். குறை இருந்தால்அதற்கான சிகிச்சைக்கு மருத்துவர் குழு பரிந்துரை செய்யும். நோய் தடுப்பு ஊசி, இரும்பு சத்து மாத்திரை, விட்டமின் சி மற்றும் ஏ மாத்திரைகளும் பரிசோதனையின் போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். 6 முதல் 18 வயது வரையிலான அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் இந்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி