பாரதிதாசன் பல்கலையில்பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2012

பாரதிதாசன் பல்கலையில்பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் வ. ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் இளநிலை கல்வியியல் (பி.எட்.) படிப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர விரும்புவோர் உடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அக்டோபர் 7-ம் தேதிக்குள் தொலைநிலைக்கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அக்.14-ம் தேதி நடைபெறும். தொடர்புக்கு 0431-240704, 0431-2407027.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி