அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2012

அகவிலைப்படி உயர்வு இப்போதைக்கு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு,தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும்என, தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், அமைச்சரவை கூட்டம், திடீரென அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவே, இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி