பாடப்புத்தகத்தில்"பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2012

பாடப்புத்தகத்தில்"பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை

பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர்"பென்னிக்குக்' வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேயபொறியாளர் பென்னிக்குக் கட்டினார். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காகதனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதன்படி, பென்னிக்குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக்குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி