ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 2.1 லட்சம் பணியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2012

ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 2.1 லட்சம் பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் இன்னும் நிரப்பப்படாமல் 2.1 லட்சம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஓட்டுநர், ரயில்வே நிலைய அதிகாரி, கார்ட், தொழில்நுட்ப கண்காணிப்பாளர், சமிக்ஞை ஆய்வாளர், பராமரிப்பு பணியாளர் உட்பட 90,0000 ரயில்வே பாதுகாப்பு பணியிடங்கள் உட்பட 2 லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 2 லட்சத்து 60 ஆயிரமாக இருந்த காலிப் பணியிடம் தற்போது 2 லட்சத்து 10 ஆயிரமாக குறைந்துள்ளது என்று கூறியுள்ள மூத்த ரயில்வே அதிகாரி, இது அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் நியமனம் நடைபெறுவதால், நியமன நடவடிக்கை சற்று தாமதமாகிறது என்றும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி