டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிருநாளில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2012

டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிருநாளில் வெளியீடு

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் எனடி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்தஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி.,தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள்எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி