கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை பணியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2012

கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை பணியிடங்கள்

கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக
நிரப்பப்படாமல் உள்ளன.இயக்குனர், கூடுதல்
இயக்குனர், சி.இ.ஓ.,தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும்
பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை
கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும்
நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை
அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது.தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ்
கூறியதாவது:
இத்துறையில் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில், 8
ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 15
ஆண்டுகளாக இப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளதால்,
அதிக இழப்புகளும் இந்த துறையில்தான் ஏற்படுகிறது. இதனால்,25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதையும் அதிகரிக்க,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி