டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில் 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2012

டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில் 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை

டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி
நியமனத்திற்குதகுதி வாய்ந்தவர்கள் பட்டியல்,
தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி
தேர்வுப் பட்டியலில்,இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு
, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது.டி .இ.டி
.,தேர்வுஅடிப்படையில், இடைநிலை, பட்டதாரி
ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இந்த ஆண்டு, ஜூலையில்
நடந்த முதல் டி.இ.டி., தேர்வில், 2,448 பேரும்,
அக்டோபரில் நடந்த மறு தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்வு பெற்றனர். ஆசிரியர் நியமன புதிய வழிகாட்டி
விதிமுறைகளின்படி, இவர்கள் அனைவருக்கும்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி,
தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இரு நாட்களில் முடிவடையலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது
.உரிய சான்றிதழ் இல்லாதவர்கள், பாடத்திற்குரிய
கல்வித்தகுதி இல்லாதவர்கள் குறித்து, டி.ஆர்.பி.,
அதிகாரிகள், கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் இறுதிக்குள்...
முதல் தகுதி தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், மறு தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும்,
இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பட்டியல்
வெளியானதும், 22 ஆயிரம் பேரும், துறை வாரியாக பிரித்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு  தேர்வுப் பெற்றவர்களின் பட்டியலை,டி.ஆர்.பி., அனுப்பும்.முதலில், பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அதன்பின் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சமூக நலத்துறை
பள்ளிகள் என, படிப்படியாக ஆசிரியர் பிரித்து, பணி நியமனம் செய்யப்படுவர். அடுத்த மாத இறுதிக்குள்,
புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளிக்
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
400 பேர் தகுதியிழப்பு?
டி.இ.டி., மறுதேர்வில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம்
பேரில், 2 சதவீதம் பேர் வரை, தகுதி இழக்க நேரிடும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி,
380 பேர் வரை, தேர்வுப் பட்டியலில் இருந்து,
நீக்கப்படுவர் என, தெரிகிறதுஇது குறித்து, டி.ஆர்.பி.,
வட்டாரம் கூறியதாவது
சிலர், சரியான கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். சிலர், "கிராஸ்
மேஜர்'பாடங்களை படித்துள்ளனர். இன்னும்
சிலருக்கு, கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் இருந்தாலும், சாதி சான்றிதழ் உள்ளிட்ட இதர
சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர்.அங்கீகாரம்
இல்லாத கல்வி நிறுவனங்களில் படித்து , பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். இப்படி, பல்வேறு காரணங்களால், இரண்டு சதவீதம் பேர் வரை
, பாதிக்கப்படலாம். இவர்கள் குறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரியும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள்தெரிவித்தன. தகுதியில்லாதவர்களின்
பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

1 comment:

  1. A candidate passed in TNTET means , he/she is the eligible person to become a teacher(according to your trb and experts view ). After that why do you sent them out by telling " Cross major, other subject, no proper qualification". TRB prepared funny questions which questions have three or two answers.
    Really trb question setters are great expert to improve our future education system.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி