மருத்துவ மாணவர்கள், இனிமேல் முதலாண்டுத் தேர்வில் தோல்வியடைந்தோர் இனி 2ம் ஆண்டு செல்லலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

மருத்துவ மாணவர்கள், இனிமேல் முதலாண்டுத் தேர்வில் தோல்வியடைந்தோர் இனி 2ம் ஆண்டு செல்லலாம்!

முதல் வருடத் தேர்வில் தவறும் மருத்துவ மாணவர்கள்,
இனிமேல் காத்திருக்காத வகையில், புதிய திட்டத்தை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்
கொண்டுவந்துள்ளது. தற்போதை நிலையில்,
முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவர், அவ்வருட
தேர்வில் தோல்வியடைந்து விட்டால், அவர் 2ம் வருட
படிப்பில் அனுமதிக்கப்படாமல், 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால்,
தற்போது புதிதாக அப்பல்கலை கொண்டு வந்துள்ள
விதிமுறைகளின்படி, முதல் வருடத்தில் தோல்வியடைந்த மாணவர், 2ம் வருட படிப்பில்
அனுமதிக்கப்படுவார். ஆனால் முதல் வருட தேர்வை மீண்டும் எழுதி தேறிய பிறகுதான், 2ம் வருட தேர்வில் கலந்துகொள்ள முடியும். இதுகுறித்து பல்கலை
துணைவேந்தர் மயில்வாகனன் கூறியதாவது தேர்வில்
தவறிய மாணவர்கள், 6 மாதங்கள் நிறுத்திவைக்கப்படுவதால், அவர்கள் மனதளவில்
மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.அவர்கள், பிற
மாணவர்களோடு கலந்து செயல்பட முடியாமல்,
தனி அணியாக இருக்க வேண்டியுள்ளது.ஆனால், 2ம்
ஆண்டிற்கு சென்றாலும், அந்தாண்டின் தேர்வை,
முதலாமாண்டு தேர்வில் தேறிய பின்புதான், எழுத முடியும் என்றார்.இம்முடிவை வரவேற்றுள்ள மாணவர்
அமைப்பினர் சிலர் கூறியதாவது உண்மையிலேயே இது வரவேற்கத்தகுந்த முடிவு. 5 ஆண்டுகள்
மருத்துவப் படிப்பில், மாணவர்களை நிறுத்தி வைப்பது சரியல்ல. பிற கல்லூரிகளைப் போலவே, தேர்வுகளில்
தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு
மாணவர்களை அனுமதிக்கும்,மருத்துவப் பல்கலையின்
முடிவானது, வரவேற்கத்தக்கது என்றனர். ஆனால், மருத்துவப் பல்கலையின் இந்த முடிவிற்கு MCI அனுமதி பெற வேண்டுமா? அல்லது தேவையில்லையா?என்றும் சிலர் கேள்வியெழுப்பி
உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி