நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனிக்க... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2012

நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனிக்க...

வரும் டிசம்பர் 23ம் தேதி சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுத, நாடுமுழுவதிலுமிருந்தும்
லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்
விபரங்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில், நவம்பர் 23ம் தேதி முதல்
வெளியிடப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள்,
தங்களின் பெயர், நெட் தேர்வுக்கென, முறையாக
பதியப்பட்டு விட்டதா என்பதை, இந்த இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறு, தங்களின் பெயர் இடம் பெறாதவர்கள், நவம்பர் 23 முதல் 29ம் தேதிக்குள், தாங்கள் நிரப்பி அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்கள் மற்றும் அதை முறையான தேதிக்குள் அனுப்பியதற்கான சான்றுகள்
ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தொடர்புடைய
தேர்வு மையத்தை அணுகலாம். 29ம் தேதிக்குப் பிறகு வரும் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்காக பதிவு செய்து அனைவருக்கும்,
தேர்வு நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னதாக,
அனுமதி சான்றிதழ் (Admission certificate)
அனுப்பப்பட்டுவிடும். டிசம்பர் 17ம் தேதி வரை, அந்த
சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள், www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில்
அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், 2 கருப்பு-வெள்ளை பாஸ்போர்ட்
அளவு புகைப்படத்துடன், டிசம்பர் 22ம் தேதி,
சம்பந்தப்பட்ட தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரை அணுக வேண்டும். தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர்க
ளின் முகவரிகள், www.csirhrdg.res.in என்ற
இணையதளத்தில், டிசம்பர் 17 முதல் 23 வரை
வெளியிடப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி