பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2012

பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி

சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன் கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. எனவே அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு  விரிவுபடுத்தப்படும்.
அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி