கல்வித்துறை சார்ந்த அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்கள் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள மூலம் நடத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2012

கல்வித்துறை சார்ந்த அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்கள் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள மூலம் நடத்த உத்தரவு.

முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்" நவம்பர் 21ல் நடக்கிறது. பட்டதாரி,
முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக
நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும்
வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தகுதியுள்ள
முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில்
ஆன்லைனில் இன்று (நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத
ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில்,
சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை பணியாளர் சங்கம் சார்பில்,
போராடி 2 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம்.
100 காலியிடத்தில் 2 என்பது குறைவு. 5 ஆக அதிகரித்தால் ஆசிரியராகும் வாய்ப்பு பலருக்கு கிட்டும்
என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி