தொடரும் எஸ்.எம்.எஸ். பிரச்னை: செல்போன் வாடிக்கையாளர்கள் அவதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2012

தொடரும் எஸ்.எம்.எஸ். பிரச்னை: செல்போன் வாடிக்கையாளர்கள் அவதி

தனியார் செல்போன் இணைப்பு வைத்திருப்பவர்கள்
மட்டுமல்லாமல்,பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் குறிப்பிட்ட தனியார்
செல்போன் சேவை எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப முடிவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்ட செல்போனை இப்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி
வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர்
எஸ்.எம்.எஸ். மூலம் பிறரைத் தொடர்பு கொள்வதையே
வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.பிறந்த நாள்
வாழ்த்து மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற
பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்
கொள்வதற்கும் பல லட்சம் செல்போன்
வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ்.சேவையைப்
பயன்படுத்துகின்றனர்.இந்த நிலையில் இந்த
தீபாவளி பண்டிகைக்கு ஏர்செல் வாடிக்கையாளர்கள்,
ஏர்டெல் செல்போன் சேவை எண்களுக்கு எஸ். எம்.எஸ். அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.இந்த இரண்டு செல்பேசி நிறுவனங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வரும்,எஸ்.எம்.எஸ். ஒப்பந்த
விவகாரமே இதற்கு காரணமாகும்.அதாவது எஸ்.எம்.எஸ்.ஒன்றுக்கு 10 பைசா என்ற வீதத்தில்
எஸ்.எம்.எஸ்.மாற்று (டெர்மினேஷன்)கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியதே காரணமாகும். இதை எதிர்த்து ஏர்செல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.இருந்தபோதும், இந்த இரண்டு நிறுவன செல்பேசி சேவைகளுக்கிடையே எஸ்.எம்.எஸ். சேவை தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு
வந்தது. இந்த நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் ஏர்செல் செல்பேசி சேவையிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களுக்கு ஏர்டெல் நிறுவனம்
தடைவிதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து வோடஃபோன் சேவை எண்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாத நிலை ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. சில
நாள்களில் இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என
ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல்.
வாடிக்கையாளர்கள் அவதி... இந்த நிலையில் பொதுத்
துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.
வாடிக்கையாளர்களும் அவ்வப்போது ஏர்டெல் போன்ற தனியார் செல்போன் சேவை எண்களுக்கு எஸ்.
எம்.எஸ். மற்றும் அழைப்புகளையும் செய்ய
முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளையும்
பி.எஸ்.என்.எல்.விதிக்கவில்லை.ஏதாவது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு
ஏற்பட்டிருக்கலாம். சில மணி நேரங்களில் மீண்டும்
சரியாகிவிடும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி