கள்ளர் சீரமைப்புத்துறை | பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2012

கள்ளர் சீரமைப்புத்துறை | பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய,
தடைகோரிய வழக்கில்,"இடைப்பட்ட காலத்தில்
செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின்
முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ்
அனுப்பவும்,மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உசிலம்பட்டி அருகே,கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு:
நான்,உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர்
மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை.மதுரை, திண்டுக்கல்,தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை
பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு
இடமாறுதல் கோரி,பள்ளிக் கல்வித்துறை
செயலாளரிடம் மனு அளித்தோம்.அதன்படி, கள்ளர்
சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள்,27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011
மார்ச்சில் அரசு உத்தரவிட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல்,தகுதித்தேர்வு நடந்தது.நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்தது.இவர்கள், பல்வேறு
மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதனால்,எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட
பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய,
தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார்.நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள்,இவ்வழக்கின்
முடிவுக்கு கட்டுப்பட்டது,'' என்றார்.பள்ளிக்
கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட
நீதிபதி,விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி