உண்மையில் ஆசிரியர் பணி காலிய ிடங்கள் எவ்வளவு..? ஓர் ஆய்வு..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2012

உண்மையில் ஆசிரியர் பணி காலிய ிடங்கள் எவ்வளவு..? ஓர் ஆய்வு..!!

BT Post Vacant List(Previous Collection Data as on July 2012 )
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்= 18932
இது முதலில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டபோது
செய்தித் தாள்களில் வந்த காலிப் பணியிட விபரமாகும்.
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு
வெளியிட்டுள்ள அரசாணையில் 1:40
என்ற மாணவர் விகிதத்தில் காலிப்
பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதற்கேற்றாற்போல்
பணிநிரவலும் செய்யப்பட்டு அதன் பிறகு காலியாக
உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரங்களை
வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 6872 மட்டுமே..!!
அதுவும் பாட வாரியான காலிப்பணியிட விபரமும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்- 450
ஆங்கிலம் - 3000
கணிதம் - 50
அறிவியல் - 500
சமூக அறிவியல் -2872
மொத்தம் - 6872...
தொடக்கக் கல்வித் துறையைப் பொருத்தமட்டில் பதவி உயர்வு மூலம் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற ுவிட்டமையால் மொத்த காலிப் பணியிடங்கள் 1000 -யைத் தாண்ட வாய்ப்பில்லை எனத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.அதுவும் சேலம் போன்ற தகுதித்
தேர்வில் மிக அதிகமான தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில்
தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்
காலிப்பணியிடம் 10-கும் குறைவுதான்.ஆக எப்படிப்
பார்த்தாலும் பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் 8000
வரையே இருக்கக்கூடும்..
18932 என்பதெல்லாம் ஒருவேளை ஆசிரியர் மாணவர்
விகிதம் 1:30 எனப் போட்டால் சாத்தியமாகக் கூடும். ஆனால் இதுவரை இதற்கான கணக்கீட்டுப் பணியை துறை ரீதியாக அரசு இன்னும் செய்யவில்லை
என்பதே உண்மை...!!
அதுவும் இந்த கடைசித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் ஆங்கிலம் மட்டுமே 3000 பேரைத்நெருங்கி
இருப்பதாகத் தெரிகிறது. ஆங்கிலம், சமூகஅறிவியல்
ஆசிரியர்களைத் தவிர மற்ற பாடத்தில் தேர்ச்சிப் பெற்ற
அனைவருக்கும் வேலை கிடைக்குமா...?
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!

1 comment:

  1. Is this news really true or just a prediction..? Dont hurt graduatesby posting these type of unconfirmed news. Please try to follow the way of posting news in Kalvisolai.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி