டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2012

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் 5
தொழிலாளர் அதிகாரி (உதவி கமிஷனர் அந்தஸ்து)
காலி பணி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. கடந்த 10–ந் தேதி ஒரு
போட்டித்தேர்வை நடத்தியது. சென்னை,மதுரை, கோவை, சேலம்,திருச்சி,நெல்லை ஆகிய 6
மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 3
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள்.இந்த நிலையில்,தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான
விடைகளை (கீ ஆன்சர்)டி.என்.பி.எஸ்.சி.தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. சமூக
அறிவியல்,தொழிலாளர் சட்டம் ஆகிய பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்டு இருந்த 200
வினாக்களுக்கும் விடைகளை தெரிந்து கொள்ளலாம். கீ ஆன்சர்–ஐ பார்ப்பதன் மூலம்,தேர்வர்கள் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்?என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். எழுத்துத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 300 ஆகும்.
தேர்வு முடிவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட
டி.என்.பி.எஸ்.சி.திட்டமிட்டுள்ளது.எழுத்துத்தேர்வில்
வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக
நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அதற்கு 40 மதிப்பெண்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு, எழுத்துத்தேர்வு–நேர்முகத்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு
பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி