வி.ஏ.ஓ. தேர்வு முடிவு: இம்மாத இறுதிக்குள் வெளியீடு: ஆர்.நடராஜ் தகவல - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

வி.ஏ.ஓ. தேர்வு முடிவு: இம்மாத இறுதிக்குள் வெளியீடு: ஆர்.நடராஜ் தகவல

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு
இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நடராஜ்
கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக
மேலாண்மையியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில்
வியாழக்கிழமை பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம்
பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். மொத்தம் 1,870 வி.ஏ.ஓ. காலிப்பணியிடங்களுக்கான
தேர்வு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8
லட்சம் பேர் எழுதினர். டிசம்பர் 15ஆம் தேதிக்குள்
குரூப் 2 தேர்வு முடிவு: அதேபோல், குரூப் 2 மறுதேர்வு
முடிவுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள்
வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குரூப் 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைத்
தொடர்ந்து மறுதேர்வு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை சுமார் 4 லட்சம் பேர் எழுதியுள்ளனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி,
உதவி வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 3,687
பணியிடங்களுக்காக ஆகஸ்ட் மாதத்தில் இந்தத்
தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வில் வினாத்தாள்
வெளியானதைத் தொடர்ந்து நவம்பரில் மறுதேர்வு
நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி