Puthiyathalaimurai Kalvi- ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏன் இந்தப் பாகுபாடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

Puthiyathalaimurai Kalvi- ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏன் இந்தப் பாகுபாடு?

* முழுக்கட்டுரையையும் படித்து விட்டு உங்கள்
கருத்துக்களை தவறாமல் கீழே உள்ள comment box ல்
பதிவு செய்யுங்கள் *
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித்
தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி
மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம். மற்ற
மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர் தற்போது ஆசிரியர் தகுதித்
தேர்வு எழுதிய ஆசிரியர்கள். க ட்டாய கல்விச் சட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு,நாடு முழுவதும்
செயல்படும் பள்ளிகளில் கல்வியின் தரம்
உயரவேண்டும் என்பதற்காக,ஆசிரியர்கள் தகுதித்
தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும்
என்று, மத்திய அரசு அறிவித்தது. ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை என்.சி.டி.இ. (நேஷனல் கவுன்சில் ஃபார் டீச்சர்
எக்ஸாமினேஷன்) யிடம் ஒப்படைத்தது மத்திய
அரசு.அதன்படி என்.சி.டி.இ.,ஒவ்வொரு மாநிலமும்
தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த,
மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசு நடத்தும் மற்ற போட்டித் தேர்வில்
அளிக்கப்படும் ஒதுக்கீட்டுக் கொள்கைகள் இந்தத் தேர்விலும் கடைப்பிடிக்கப்படும்.அதே நேரத்தில்
ஒதுக்கீட்டு விதிகளைத் தளர்த்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதாவது பொதுப் பிரிவினருக்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்கும்போது,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு
மாணவர்களுக்கு, தகுதி மதிப்பெண்களில் 5 சதவீதம்
தளர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த ஒதுக்கீட்டுக் கொள்கை. அந்த அடிப்படையில் மதிப்பெண்களில் 5
சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தளர்வு அளிக்க
மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை அளித்தது என்.சி.டி.இ. மத்திய அரசின் போட்டித் தேர்வுக்
கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள
மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு
கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர்
தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, முதல் முறையாக ஆசிரியர் தகுதித்
தேர்வு அறிவிப்பு வெளியானபோது, பாடத்திட்டம், கட்டணம் செலுத்தும் முறை குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர மதிப்பெண் தளர்வு குறித்து எந்தவொரு
அறிவிப்பையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவிக்கவில்லை.ஒருவேளை ஆசிரியர் தகுதித்
தேர்வு முடியும் தருவாயில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.அதுவும் நடக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு
அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான அடிப்படை
மதிப்பெண்ணில் தளர்வுச் சலுகை அளிக்கப்படுகிறது.
கல்லூரி ஆசிரியர்கள் தேர்விற்கே ஒதுக்கீடு
அடிப்படையில் மதிப்பெண்கள் தளர்வு அளிக்கும்போது , ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும்
தமிழகம் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை"
என்கின்றனர்.இதுகுறித்து ஆசிரியர் தகுதி மறுதேர்வு
எழுதிய விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை சங்கீதா
கூறும்போது, நான் அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்தவள். தற்போது ஆசிரியர் தகுதி மறுதேர்வு
எழுதியிருக்கிறேன். அரசு வெளியிட்டுள்ள
விடைகளையும்,தேர்வில் நான் அளித்த விடைகளையும்
ஒப்பிட்டுப் பார்க்கும்போது 88 மதிப்பெண்கள்
பெற்றிருக்கிறேன். ஆனால், அடிப்படைத் தகுதி மதிப்பெண்ணோ 90. என்.சி.டி.இ. அறிவித்துள்ள
ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கப்படும் பட்சத்தில் 88 மதிப்பெண்ணானது என்
பணியை உறுதி செய்துவிடும்" என்றார். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்விற்கு என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுச் சலுகை மற்ற
மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை.

16 comments:

  1. 150 marksku 90 marks(60%) kooda eduka mudiyaama adhulayum salugai kaekuradhu asingam. Apadi salugaila pora teachers waste.60% only correct for all caste.

    ReplyDelete
  2. If the TNTET question is given to the present class- XII students, They can score more than 90 marks out of 120 marks(except psychology). The same students can't score this marks after 6 years.You people can't criticize the teacher who did not score 90 marks, Those teachers only the backbone of private schools and make the students to score 100 marks in tenth and 200 marks in +2. TRB already allotted 7 marks for each candidate and more than 5 questions have got two/three answers."What a funny test ?". This exam really a political revenge only, Teachers only the scape goat of this government especially senior teachers.Hitler killed many people in the concentration camp, now teachers are being killed. Education is privatized and TASMAC (liquor) is run by government. "please think about TN , what is going on"

    ReplyDelete
    Replies
    1. hello mr rajaram who said u they allotted 7 marks for each candidate i also wrote tet and i got 86
      i am sure 86 answer i did correctly they may be allotted 7 marks my marks were 93 if u know the correct information u give the comment other wise please keep quiet-thamaraiselvi

      Delete
  3. What a funny topic this is..! If the teacher cannot get 90 marks by his/her knowledge means he/she should not go to teaching job with his/her caste. Why do students wear uniform to school..? No difference makes the students sad. Here no caste wise dress is given. As same as 90 is the common uniform marks to all teachers. Here also no reduction or difference to be given. If any TET hater is visit this site means just read the topic "THAKUTHI THAAN ADIPPADAI BY DINAMANI".

    ReplyDelete
  4. What a funny topic this is..! If the teacher cannot get 90 marks by his/her knowledge means he/she should not go to teaching job with his/her caste. Why do students wear uniform to school..? No difference makes the students sad. Here no caste wise dress is given. As same as 90 is the common uniform marks to all teachers. Here also no reduction or difference to be given. If any TET hater is visit this site means just read the topic "THAKUTHI THAAN ADIPPADAI BY DINAMANI".

    ReplyDelete
  5. WHO WROTE AN ARTICLE IN DINAMANI? IS HE AN EDUCATIONALIST? NO. HE IS A CAPITALIST. WHAT DOES HE KNOW ABOUT TEACHING AND TEACHERS? SCORING 85-89 MARKS ARE INQUALIFIED? WHAT SYSTEM IS THIS? VERY WORST. IN INDIA, MANY STATES ARE REDUCED (MINIMUM), WHAT ABOUT TAMILNADU? MANY TEACHERS PASSED WITH 90 MARKS AND MANY FAILED WITH 89 MARKS. FAILED WITH 89 MARKS ARE NOT TALENTED?????????????????? IT'S BETTER TO REDUCE FEW PERCENTAGE OF MARKS FOR ALL CATEGORIES. BY REDUCING FEW PERCENTAGE (5%) IT WILL NOT AFFECT THE QUALITY OF TEACHERS.

    ReplyDelete
  6. person who is not eligible for scoring 60% is not eligible for a teacher profession.
    The method they are following is correct.Then what is the difference between the person who scored 60% above and the person who scored 60% below

    ReplyDelete
  7. Lanjam illatha velai kidaikka ore vali TET examum,athan nambaka thanmayum than. Caste salugai. Pass mark kuraipu ellam lanjathukku vali vagukkum.

    ReplyDelete
  8. if a teacher is not able to score 90 marks and asking for the reducion of marks to the govt, then the teacher is like a student who has scored 34 marks and asking for one mark to the teacher. the govt don't want a teacher like that.

    ReplyDelete
  9. frndz antha lady onnum pitcha kekkala thannoda urimaiya kekkura puriuthungala. 5% thalarvu waste nna central gov. yethukku 5% to 20% varaikkum less pannikkalam nu solkirathu. athai yen Andhira, Karnatka,Assam,Orissa pinpatriyathu appa neenga solliyatha patha central gov.& state gov. muttaalgala? athai amal paduthalam nu sonna court thappa ? mothalla TET exam qus paper pathu irukkengala. karuthu sollum munnadi konjam yosinga nanum TET exam la pass pannavan than so enekku enga karuththu solla thaguthi irukkum nu ninaikkuren. bye frndz jayhind1.

    ReplyDelete
    Replies
    1. i have passed in tet so i can give my comment.if they have worked hard they could have got the mark

      Delete
  10. Hello eswaran naanum tet pass thaan.TET question paper is good.but padika thayara illamal ippadi time waste pandravanga athigam.matha statela TET verum thaguthi thervu mattum thaan.but inge velaikana vaaipu.velaiku select panna hardwork thevai.150 marksla 90 koodava eduka mudiyathu?DTEd BEd pad ikkum pothe examku prepare pannalam. Or ippa irunthe prepare pannunga.next examla uruthiya pass agalam.job kidaikum endra nambikkayil padinga.HARDWORK WILL NEVER FAIL. Ipadi kasta pattu padichu velai vaanguna thaan athoda arumai puriyum.ungalukum perunayai irukkum God bless u

    ReplyDelete
  11. Athalam sari. neenkalam teachera vara poravanka thane? unkaluku ethukku 150ku 90 pass. padina 60 mark ku thappa thane ans pannirupinka.. apdina neenka full skill teachera?.. unkaluku ethuku 150 ku 150 pass nu solla koodathu? by student

    ReplyDelete
  12. mark 5% reduce panna avankalailam posting podanumla.. illaina innum vacancy 10000,20000,30000 nu solli solli perumai padalam la..

    ReplyDelete
  13. Naankalam 90 mark eduthu pass pannuvom. Neenkalam 5% kammi panni apram enkala vida selection mark la 1 mark kooda eduthalum enkaluku posting kidaikathula. so 90 ku 1 mark kuda kammi panna koodathu.. so govt ku than enkaloda support

    ReplyDelete
  14. 5% Salugai vaenumnu kaetu adam pidikum nanbargalae job vaenumnu aasa pattaa time waste pannaama poyi ukkaandhu padinga. r tutorial collegela saendhaadhu padichi next time pass mark edunga. Kasta pattu pass pannavangaluku vaazhthu solli vazhi vidunga. Ozhaichi saapidanum saamyo.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி