TNPSC: இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

TNPSC: இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர.

"இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்  என, டி.என்.பி.எஸ்.சி.,
தலைவர் நட்ராஜ் கூறினார். சென்னை பல்கலைக்கழக,
மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள
மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்" குறித்த
கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ்
பேசியதாவது:
மனித வளத்தை மேம்படுத்தும் வகையில்,
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால்,
நிறுவனங்களில் உள்ள மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும்
கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு
சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக
திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில்,
வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள்,இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள்,வரும் டிச., 15க்குள் வெளியிடப்படும். அரசு பணியாளர்
தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக,
ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம்
கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில்,
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது. இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி