1,000 இளநிலை உதவியாளர்கள் கல்வி துறையில் விரைவில் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2012

1,000 இளநிலை உதவியாளர்கள் கல்வி துறையில் விரைவில் நியமனம்.

பள்ளி கல்வித் துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள்மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலைஉதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன.இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார்நிலையில் உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில்உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி